districts

img

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாநகரக் காவல் ஆணையர் ஆய்வு

திருப்பூர், பிப்.22- திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து மாநகரக் காவல்  ஆணையர் ராஜேந்திரன் சனி யன்று நேரில் ஆய்வு மேற் கொண்டார். தொழில் நகரமான திருப் பூர் மாநகரில் போக்குவரத்து  நெரிசல் அதிகரித்து வருகிறது. இதை  கட்டுப்படுத்தும் வகையில், போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் மாநகரக் காவலர் கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதி யாக பொதுமக்கள் சாலையை கடக்கும் பகு திகள் அடைக்கப்பட்டு, ஒரு வழிப் பாதையாக  மாற்றப்படுவது மற்றும் நடை மேம்பாலங் கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்  திருப்பூர் மாநகரின் முக்கியப் பகுதியான ரயில்  நிலையத்திற்கு வெளியே ஊத்துக்குளி சாலையில் இருந்து வரும் வாகனங்கள்,  ராய புரம், சூசையாபுரம் மற்றும் பூங்கா சாலை  உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாக னங்கள்,  ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வரும் வாகனங்கள் என அனைத் தும் சந்திக்கும் முக்கிய பகுதியாக தபால் நிலையம் பகுதி இருக்கிறது. இதன் அருகே  போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தற்கா லிக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், போக்குவரத்து நெரிசலை குறைப் பதற்கு மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவ டிக்கைகள் குறித்து மாநகரக் காவல் ஆணை யர் ராஜேந்திரன் சனியன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். மூன்று பகுதிகளில் இருந்து வரும் வாக னங்கள் மேம்பாலம் வழியாக புஷ்பா ரவுண் டானா பகுதிக்கு செல்லக்கூடிய அந்த சாலை யில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல்  ஏற்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளது.  எனவே இதற்கு தீர்வு காணும் வகையில்  அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் எனவும் காவலர்கள் தரப்பில் தெரி விக்கப்பட்டது.