districts

img

நகராட்சிகளில் இபிஎப் தொகை விபரங்களை தராத ஒப்பந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை: சிஐடியு வலியுறுத்தல்

திருப்பூர், பிப்.22- திருப்பூர் மாநகராட்சி மற்றும் இம் மாவட்டத்தில் உள்ள மற்ற நகராட்சிக ளில் அவுட்சோர்சிங் ஒப்பந்த நிறுவ னத்தின் கீழ் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு இபிஎப் பிடித்தம்  செய்யாத நிறுவனங்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என திருப் பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள் ளாட்சித் துறை ஊழியர் சங்கம் வலியு றுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி  உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் கே.ரங்க ராஜ் தலைமையில் வெள்ளியன்று  வருங் கால வைப்பு நிதி உதவி  ஆணையரிடம் அளித்த மனுவில்  கூறியிருப்பதாவது, திருப்பூர் மாநக ராட்சியில் மண்டலம் 1,2இன் குடிநீர்  பணிகளை அவிநாசி எம்எஸ். மாஸ் டர் மைண்ட் நிறுவனம், எஸ்டபிள்யூ எம்எஸ் ஆகிய நிறுவனங்கள் ஒப்பந் தம் எடுத்துள்ளது. மண்டலம் 3 இல்  மதுக்கரை ஸ்ரீவிநாயகா கண்ட்ரோல்  டெக்னாலஜிஸ் நிறுவனம் ஒப்பந்தம்  எடுத்துள்ளது. மண்டலம் 4 இல்  சென்னை அண்ணாமலையார் கன்ஸ்ட்ரக்சன்ஸ் ஆகிய நிறுவனங் கள் குடிநீர் பணிகளை ஒப்பந்தம்  எடுத்துள்ளன. இந்நிறுவனங்களில் குடிநீர் பணியாளர்களிடம் சட்டப்படி  பிடித்தம் செய்யப்பட்ட இபிஎப்  தொகைகளுடன், நிறுவனங்களின் பங்குத் தொகைகள் செலுத்தப்பட்ட  விவரங்கள் வருவதில்லை. அதேபோல உடுமலை நகராட்சி யில் திண்டுக்கல் எம்.எஸ்.எஸ்ஸெச் நீட் அண்ட் டைடி ஏஜென்சி நிறு வனம், தாராபுரம் நகராட்சியின் சிங் காநல்லூர் ஆர்.கே. கம்பெனி, காங் கேயம், வெள்ளகோயில் நகராட்சிக ளில் துறையூர் எஸ்.ஆர் எண்டர்பி ரைசஸ், பல்லடம் நகராட்சியில் சென்னை சரம் என்விரோ சர்வீசஸ்,  திருமுருகன் பூண்டி நகராட்சியில் திருப்பூர் செந்தூர் எண்டர்பிரைசஸ் ஆகிய அவுட்சோர்சிங் நிறுவனங்கள் அந்தந்த நகராட்சிகளில் வேலை  செய்யும் தூய்மைப் பணியாளர் உள் ளிட்ட ஊழியர்களிடம், கடந்த ஒன் றரை ஆண்டுகளுக்கு மேலாக பிடித் தம் செய்த இபிஎப் தொகைகளு டன், சம்பந்தப்பட்ட அவுட்சோர்சிங் நிறுவனங்கள் சட்டப்படி செலுத்த வேண்டிய பங்குத் தொகையை முறையாக ஊழியர்களின் கணக்கு களில் செலுத்தப்பட்ட விபரங்கள் ஊழியர்களுக்கு கிடைப்பதில்லை. எனவே பணியாளர் வருங்கால வைப்பு நிதிகள் மற்றும் பல்வேறு வகைமைகள் சட்டம் 1952 இன் படி திருப்பூர் மாநகராட்சி, உடுமலை, பல்லடம், காங்கேயம், தாராபுரம் வெள்ளகோயில், திருமுருகன் பூண்டி நகராட்சிகளில் வேலை செய் யும் அவுட்சோர்சிங் ஒப்பந்த தூய் மைப் பணியாளர் உள்ளிட்ட ஊழி யர்களின் இபிஎப் பிடித்தம், நிறுவ னங்களின் பங்குத் தொகைகளோடு செலுத்திடவும், அவ்வாறு செலுத் தாத அவுட்சோர்சிங் ஒப்பந்த நிறுவ னத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக் கவும் வேண்டும் என சிஐடியு சார்பில்  கே.ரங்கராஜ் கேட்டுக் கொண்டுள் ளார்.