districts

img

மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக சிஐடியு ஆவேசம்

திருப்பூர் மே 20- மோட்டார் வாகன திருத்த சட் டத்தை தமிழகத்தில் அமலாக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப் பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு மோட்டார் மற்றும் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இந்தியாவில் நாள்தோறும் பெட் ரோல், டீசல் விலைகள் உயர்ந்து கொண்டே வருகிறது. ஆனால், இப் பிரச்சனை சம்பந்தமாக ஒன்றிய பாஜக அரசு இதுவரை எந்தவித நட வடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, எரிபொருட்களின் விலையை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும். ஆன்லைன் அபராத கட்டண வசூலை முறைப்படுத்த வேண்டும். பல மடங்கு உயர்ந்துள்ள பழைய வாகனங்களுக் கான கட்டணத்தை ரத்து செய்ய வேண் டும். மோட்டார் வாகன சட்டத் திருத் தத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப் பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளியன்று சிஐடியு மோட் டார் மற்றும் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ், சிஐ டியு மோட்டார் சங்க தலைவர் எஸ்.விஸ்வநாதன், மாவட்ட செயலாளர் ஒய்.அன்பு, பொருளாளர் ச.அருண், ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் சுகு மார், மாவட்டச் செயலாளர் சிவராமன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.