தாராபுரம், டிச.5- விதிகளுக்கு புறம்பாக தன்னிச் சையாக முது நிலைப்பட்டியல் வெளி யிட்ட தலைமை பொறியாளர் மீது நட வடிக்கை கோரி செவ்வாயன்று தமிழ் நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தாராபுரம் கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் தலை வர் கே.வெங்கிடுசாமி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி கோட்ட செயலாளர் இல.தில்லையப் பன் பேசினார். இதைத்தொடர்ந்து, தலைமை பொறியாளர் சந்திரசேக ரன் பொதுப்பணி கட்டிடங்கள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறை முகங்கள் துறை அமைச்சரின் உற வினர் என கூறிக்கொண்டு நிர் வாக பணிகளில் தொழிற்சங்க ரீதியி லான கோரிக்கைகள் மீது பாராமுகம் காட்டுகிறார். மேலும், தொழிற்சங்க உரிமைகளை கேலிக்குள்ளாக்கும் விதமாக ஜனநாயக ரீதியான தொழிற்சங்க இயக்கங்களை அச்சு றுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். விதிகளுக்கு புறம்பாக தன்னிச்சையாக முதுநிலைப்பட்டி யல் வெளியிட்ட தலைமை பொறி யாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைப்பணியாளர்க ளின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கவேண்டும். சாலைப் பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு முத்தரப்பு பேச்சு வார்த்தை கூட்டு அமர்வு நடத்தி தீர்வு காணவேண்டும். சாலைப்பணி யாளர்களில் இறந்தோரின் வாரிசுக ளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கவேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் ரா.ஜெகதீஸ் வரன், கோட்ட துணைத்தலைவர் வி. தங்கவேல், அரசு ஊழியர் சங்க நிர்வா கிகள் கே.செந்தில்குமார், எம்.மேக லிங்கம், பி.ஆறுமுகம், எஸ்.ராணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்ட துணைத்தலைவர் ஆர்.செல்வக்கு மார் நன்றி தெரிவித்தார்.