கொரோனாவினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி
உதகை, செப்.18- நீலகிரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோர் களை இழந்த 93 குழந்தைகளுக்கு ரூ.2 கோடியே 83 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படவுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்பால் தற்போது வரை 196 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சூழலில், மாவட்ட ஆட்சி யர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின் பேரில், மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலர் பிரபு மற்றும் குழுவினர் நீலகிரி மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை கண்டறியும் பணியை மேற்கொண்ட னர். இதில் 123 குழந்தைகள் பெற்றோர்களை இழந்துள்ள னர். அவர்களில், அரசு பணியாளர்களின் குழந்தைகள் 12 பேரும், அரசு பணியில் இல்லாதவர்களின் 111 குழந்தைக ளும் அடங்குவர். இதில் 2 குழந்தைகள் தாய், தந்தை இருவரையும் இழந் துள்ளனர். அவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவியும், படிப்பு செலவும், 109 குழந்தைகள் பெற்றோரில் ஒருவரை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ரூ.3 லட்சம் நிவா ரண தொகையும் வழங்கப்படும் என தமிழக அரசு அறி வித்தது. தற்போது இதில் 93 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.2 கோடியே 83 லட்சம் நிவாரண தொகை வழங் கப்படுகிறது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் யாரேனும் இருப் பின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் 0423-2445529 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்களின் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த பயிற்சி பட்டறை
திருப்பூர், செப்.18- கோவையில் பெண் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்களின் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த பயிற்சிப்பட்டறை நடைபெற்றது. பெண் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்களின் பாது காப்பு சட்டங்கள் குறித்த பயிற்சி கோவையில் நடைபெற் றது. இந்த பயிற்சியின் நோக்கம் குறித்து திருப்பூர் மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ப. மெல்வின் விளக்கி பேசினார். ஏஐடியுசி மாநில செயலாளர் எம். ஆறுமுகம் தலை மையேற்று மாநில அளவில் தொழிலாளர்களுக்கு உள்ள பிரச்சனைகள் மற்றும் பஞ்சாலை, பனியன் கம்பெனிகளில் பணிபுரியும் பெண்களின் நிலை குறித்து பேசினார். கோவை மாவட்ட சிஐடியு துணை செயலாளர் என்.செல்வ ராஜ், பஞ்சாலைகளின் இன்றைய நிலை குறித்து உரையாற்றி னார். கோவை மாவட்ட சமூக நலத்துறை பெண்கள் பாது காப்பு அலுவலரான கே.அருணா, விடுதிகள் பதிவு செய்வது குறித்தும், உள்புகார் குழு அமைப்பது குறித்தும் கருத்துரை வழங்கினார். அதனை தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு சட் டங்கள் குறித்தும், பொதுவான சட்டங்கள் பற்றியும் வழக்கறி ஞர் எம். மதிவாணன் விளக்கினார். இந்நிகழ்ச்சியில் கேர் டி அமைப்பின் ஒருங்கிணைப்பா ளர்கள் எம்.மோத்திராஜ், ஏ.ஜூலியா ஜெரோசா, பி.பிரீத்தி மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள், தன்னார்வு தொண்டு நிறுவன பணியாளர்கள், பஞ்சாலை பெண் தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோத்தகிரி: வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு
உதகை, செப்.18- கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதி களில் ரூ.35 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதி களில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியிலி ருந்து கோத்தகிரி அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட கான்கிரீட் தளம் பணியினையும், ரூ.6 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட ஒரசோலை சுடுகாட்டு தடுப்புச் சுவர் பணியினையும், கோத்தகிரி, உதகை சாலையில் அமைந் துள்ள கிருஷ்ணாபுதூரில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டி முடிக் கப்பட்ட அங்கன்வாடி மையத்தினையும், ரூ.4 லட்சம் மதிப் பில் முடிக்கப்பட்ட தாந்தநாடு சமுதாய கூடம் சாலை பணி யினையும், கோத்தகிரி அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.4 லட் சம் மதிப்பில் முடிக்கப்பட்ட கான்கிரீட் தளம் பணியினையும், ஒர சோலையில் ரூ.6 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட தடுப்புச் சுவர் பணியினையும் என மொத்தம் ரூ.35 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக, கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியில் உள்ள ஜான்சலீவன் நினைவு மண்டபம் அருகில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டு வரும் பூங்காவினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, குன்னூர் சார் ஆட்சியர் தீபனா விஸ்வேஷ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், தோட் டக் கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம், சாம் ராஜ், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கனகராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுஜாதா உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வாலிபர் தற்கொலை
தருமபுரி, செப்.18- தருமபுரி அருகே வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், கம் பைநல்லூர் அடுத்த இரு மத்தூரைச் சேர்ந்தவர் கோபி (32). இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதால், தின மும் மது அருந்திவிட்டு வீட் டில் அடிக்கடி தகராறில் ஈடு பட்டு வந்துள்ளார். இந்நிலை யில், கோபி வெள்ளியன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பைநல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.