அவிநாசி, பிப்.3- அவிநாசி பேரூராட்சி யில் திமுக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிக ளின் சார்பில் 12வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகின்றது. தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்நி லையில் அவிநாசி பேரூ ராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் மதசார்பற்ற முற் போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி 12வது வார்டில் போட்டியிடுகிறது. இந்த வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்திய ஜன நாயக மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் வி.தேவி போட்டி யிடுகிறார்.
பல்லடம்
பல்லடம் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இதில், 17வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.குமரன் களம் இறங்குகிறார்.
திருப்பூர்
அதேபோல், வெள்ளக்கோவில் நகராட்சி 7வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக எம்.ராதாமணி போட்டியிடுகிறார்.