சேலம், பிப்.4- சேலத்தில் நடைபெற்ற உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு நடைபயணம் நிகழ்ச்சி யில் பலர் கலந்து கொண்டனர். சேலத்தில் உள்ள விநாயகா கார்கி னோஸ் புற்றுநோய் சிகிச்சை மையம் சார்பில், உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, புற்றுநோயை தடுப்பது மற்றும் முன்கூட்டியே கண்டறிதல் குறித்த விழிப்புணர்வை ஊக்கு விக்கும் வகையில், வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. விம்ஸ் மருத்துவமனை ஸ்பெஷாலிட்டி கிளினிக்கிலிருந்து துவங்கிய வாக்கத்தானை, சேலம் மாநகர தெற்கு காவல் துணை ஆணையர் மதிவாணன் கொடி யசைத்து துவக்கி வைத்தார். விம்ஸ் மருத்து வமனை மருத்துவ இயக்குநர் கே.மீனாட்சி சுந்தரம், துணை மருத்துவ இயக்குநர் அசோக் ராஜ்குமார், கார்கினோஸ் ஹெல்த் கேர் மருத்துவ இயக்குநர் பால்செபாஸ்டி யன், புற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் பிற மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.