தருமபுரி மார்ச் 9- தமிழ்நாடு தோழி கூட்டமைப்பு, மொரப்பூர் விப்ரோ தொண்டு நிறுவனம் சார்பில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மொரப்பூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கையெழுத்து பிரச்சார இயக்கத்தை மொரப்பூர் ஒன்றியக்குழு தலைவர் சுமதி செங்கண்ணன் தொடக்கி வைத்தார். இதில், பாலியல் வன்முறை தடுப்புச் சட்டப்படி அனைத்து தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங் களில் உள் புகார் குழுக்களை அமைக்க வேண்டும். மகளி ருக்கான புகார் குழுக்களை தமிழக அரசின் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத் துறையினர் கண்காணிக்க வேண்டும். பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவோ ருக்கு உரிய பாதுகாப்புகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், தோழி கூட்டமைப்பின் தலைவர் எம்.சங்கர், விப்ரோ தொண்டு நிறுவன இயக்குனர் ஜி.வெங்கடேசன், மொரப்பூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யின் தலைவர் ஏ.மோகன்ராசு, ஊராட்சி மன்றத் தலைவர் உமாராணி உலகநாதன், சீட்ஸ் தொண்டு நிறுவன இயக்கு னர் ஏ.சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.