கோவை, பிப்.24- ஒன்றிய அரசின் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய த்தை கண்டித்து தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநலச் சங்கத் தினர் கோவையில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) என்டிஓ3 (தேசிய கட்டணக் கொள்கை:3) யை அமல்படுத்தியதன் காரண மாக கட்டண சேனல்களில் கட்டண விலை உயர்ந்துள்ளது. இந் நிலையில், டிராயை கண்டித்தும், கட்டணத்தை கட்டுப்படுத்த வலியு றுத்தி தமிழ்நாடு முழுவதும் தமிழக கேபிள் டிவி ஆப்ரேட் டர்கள் பொதுநல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக கேபிள் டிவி ஆப்ரேட் டர்கள் பொதுநலச் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் என்.ஜாகீர் தலைமை தாங்கினார். கோரிக்கைகள் குறித்து, கோவை மாவட்ட செயலாளர் சிவக்குமார் உரையாற்றினார். ஆர்ப்பாட் டத்தில், நூற்றுக்கும் மேற்பட் டோர் கலந்துகொண்டு கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண் டியும், பொது மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், கார்ப்ப ரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக டிராய் என்டிஓ3 யை அமல்படுத்தி கட்டண சேனல்களின் விலையை உயர்த்தி பொது மக்களுக்கு சிரமத்தை அளித்துள்ளதாகவும், கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என கண்டன முழக்கங் களை எழுப்பினர்.