சேலம், மார்ச் 23- பிஎஸ்என்எல் ஊழியர் சங்க அமைப்பு தின கொடி யேற்று விழா சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங் களில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்க அமைப்பு தினத்தை யொட்டி சேலம் பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம், மேலாளர் அலுவலகம், ராசிபுரம், ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், நாமக்கல், வேலூர் உள்ளிட்ட இடங்களில் கொடியேற்றி கொண்டாடப்பட்டது. இதில், பிஎஸ் என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன் னதாக, இந்நிகழ்ச்சியில், ஒன்றிய அரசு பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனத்தை தனியாருக்கு தொடர்ந்து விற்பனை செய்யும் முயற்சியை கண்டித்து நடை பெறும் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் பிஎஸ்என்எல் தொழிலாளர்கள் திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.