ஈரோடு, அக். 27- ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி பிஎஸ்என் எல் ஊழியர் சங்கம், ஓய்வூதியர் சங் கம் மற்றும் ஒப்பந்த ஊழியர் சங் கம் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் ஈரோடு பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் வெள்ளி யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் நிரந்தர ஊழியர்க ளுக்கு 2017 முதல் ஊதிய மாற்றம் வழங்க வேண்டும். ஓய்வூதியர்க ளுக்கு ஓய்வூதிய மாற்றம் செய்ய வேண்டும். ஒப்பந்த ஊழியர்க ளுக்கு குறைந்த பட்ச ஊதியம், பென்சன், இஎஸ்ஐ உள்ளிட்ட சமூக நல பாதுகாப்பு வழங்க வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி 5 ஜி சேவை அளிக்க வேண்டும். கேசுவல் ஊழியர்களுக்கு 7 ஆவது ஊதிய குழு ஊதிய மாற் றம் மற்றும் அகவிலைப்படி ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் வி.மணியன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியு றுத்தி ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட உதவிப் பொருளாளர் கண் ணப்பன் முழக்கங்களை எழுப்பி னார். ஒப்பந்த ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எம்.சையத் இத்ரீஸ் சிறப்புரையாற்றினார். ஓய்வூதியர் சங்க மாவட்ட சிறப்பு அழைப்பா ளர் என்.பழனிச்சாமி, ஒருங்கிணைப் புக்குழு கன்வீனர் எஸ்.பாலு, ஓய்வூ தியர் சங்க மாநில உதவித் தலைவர் என்.குப்புசாமி, ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பி னர் ஆர்.தம்பிகலையான் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட உதவிப் பொருளாளர் எஸ். கண்ணப்பன் நன்றி கூறினார். இதேபோல அந்தியூரில் நஞ் சப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பரமசிவம், கிட்டு சாமி, லோகநாதன், எஸ்.வி.மாரி முத்து, ஆர்.முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, பிஎஸ்என்எல் ஓய்வூதி யர் சங்க மாவட்டச் செயலாளர் டி. பாஸ்கரன் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மத் தியக்குழு உறுப்பினர் உமாராணி, மாநில உதவிச்செயலாளர் எம்.பாபு, மாவட்டச் செயலாளர் பி. கிருஷ்ணன், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ஜோதி உட் பட பலர் கலந்து கொண்டனர்.