districts

img

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் பத்து ரூபாய் முதல் புத்தகங்கள்

புதுக்கோட்டை, பிப்.21- ரூபாய் 10 முதல் ஆயிரத்திற்கும் அதிகமான விலை வரை கிடைக்கும் புத்தகங்களால் வந்திருந்த அனை வரும் புத்தகங்களை வாங்கிச் செல்லும் மனநிலையை உருவாக்கி உள்ளது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா. புத்தகத் திருவிழா வளாகத்தில் அறிவியல் வெளியீடு, பாரதி புத்தகா லயம் உள்ளிட்ட சில பதிப்பகங்கள் ரூ.10 முதல் மிகக்குறைந்த விலை யிலான ஏராளமான புத்தகங்களை விற்பனைக்கு வைத்துள்ளன. அதே நேரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான விலையிலும் ஏராளமான புத்தகங்கள் கிடைக்கின்றனர். இதனால், சிறுவர் முதல் பெரிய வர் வரை, ஆரம்பகட்ட வாசகர் முதல், தீவிரமான வாசகர்கள் வரை அனைத்துப் பகுதியினருக்கும் ஏற்றவகையில் புதுக்கோட்டை புத்த கத் திருவிழா வடிவமைக்கப்பட் டுள்ளது. இதனால், புத்தகத் திருவிழா விற்கு வெறும் பார்iவாயர்களாக வந்து செல்பவர்களைக்கூட ஏதாவது ஒரு புத்தகத்தை வாங்கிச் செல்வ தாக பதிப்பகத்தினர் தெரிவிக்கின் றனர். 
 

நாணயக் கண்காட்சி

புதுக்கோட்டை நாணயவியல் கழகம் சார்பில் அதன் நிறுவனர் எஸ்.டி. பஷிர் அலியின் ஏற்பாட்டில் உலக அளவிலான அரிய நாண யங்கள், பணத்தாள்கள், அஞ்சல் தலைகள், அஞ்சல் உறைகளைக் கொண்ட கண்காட்சியும் வளா கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஏராள மான மாணவர்களுக்கு அவர் நீண்ட விளக்கமும் அளித்து வருகிறார். கேள்விகளுக்கு சரியான விடை யளிக்கும் மாணவர்களுக்கு புத்தகப் பரிசுகளையும் வழங்கி வருகிறார்.