districts

முதல்வர் குறித்து அவதூறு பாஜக நிர்வாகி கைது

இளம்பிள்ளை, மார்ச் 30- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம் மேற் கொண்டிருந்தார். அவரது பயணத்தை மேற்கோள்காட்டி,  சேலம் மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச்செயலா ளர் அருள்பிரசாத் என்பவர் தனது ட்விட்டரில் அவதூறு கருத்தை பதிவு செய்திருந்தார். இந்நிலையில், தவறான  தகவலை வெளியிட்டதற்காக அருள் பிரசாத்தை எடப்பாடி  காவல் துறையினர் செவ்வாயன்று வைது செய்து, அவரி டம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.