சேலம் மார்ச் 29 - பாஜகவும் அதிமுகவும் கள்ளக்கூட்டணி வைத்து இருப்பதாக டி எம் செல்வகணபதி குற்றம் சாட்டினார். இந்தியா கூட்டணியின் சார்பில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக போட்டி யிடுகிறது. திமுக சார்பில் முன்னாள் அமைச் சர் டி.எம் செல்வகணபதி போட்டியிடுகிறார். இதனை அடுத்து அவர் பல்வேறு கட்டங்க ளாக சேலம் மாவட்டம் முழுவதிலும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலை யில் இன்று சேலம் மாநகர் மாவட்ட காங்கி ரஸ் கமிட்டி அலுவலகத்தில் மாவட்ட தலை வர் பாஸ்கர் தலைமையில் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடை பெற்றது. இதில் பங்கேற்ற டி.எம் செல்வ கணபதிக்கு திரளான காங்கிரஸ் கட்சியினர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்த னர். இதனையடுத்து வேட்பாளர் செல்வக ணபதி பேசுகையில், இந்தியா கூட்டணி ஆட்சி மாற்றத்திற்கான கொள்கைக் கூட்டணி. பார திய ஜனதா கட்சியும் எடப்பாடியும் கள்ளக் கூட்டணியை வைத்துள்ளனர். அதிமுகவும் பாஜகவும் ஒன்றுதான். அதிமுகவிற்கு வாக்களிப்பதும் மோடிக்கு போடும் ஓட்டு தான். 100 நாள் வேலைத்திட்ட நிதியை நிறுத்தி வைத்து தமிழகத்திற்கு பாஜக வஞ் சனை செய்து விட்டது. எடப்பாடி பழனிச்சாமி வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 விழுக்காடு ஒதுக்கீடு செய்ததாக பொய் அறிக்கை வெளி யிட்டு வன்னியர்களை ஏமாற்றிவிட்டார். இவர்கள் பண பலத்தை நம்பியே தேர்தலை சந்திக்கின்றனர் மக்கள் ஜனநாயகத்தை யோசிப்பதில்லை. திமுக மற்றும் காங்கிரஸ் மக்களுக்கு செய்த நன்மைகளை வீடு தோறும் திண்ணை பிரச்சாரம் செய்து நாம் வாக்கு சேகரிக்க வேண்டும் என்றார். இந்நிகழ்வில், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் நாடாளு மன்ற தேர்தல் காங்கிரஸ் பொறுப்பாளர் செழி யன் ,சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் தாரை கணபதி, வர்த்தக பிரிவு தலைவர் சுப்பிரமணியம், மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி, மாமன்ற உறுப்பினர் கிரிஜா குமரேசன் , இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பிரபு உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் ஏரா ளமானோர் கலந்து கொண்டனர்.