districts

img

கருமாபாளையத்தில் பறவைகள் கணக்கீடு

திருப்பூர், ஜன.31 - திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு -2 சார்பாக தத்தெடுத்த கிராமமான கருமாபாளையத்தில் பறவைகள் கணக்கீடு பணி நடை பெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட ஏழு நாட்கள் சிறப்பு முகாம்  கடந்த சனியன்று முதல் நடைபெற்று வருகிறது. அதன் படி  4ஆவது நாளான செவ்வாயன்று கருமாபாளையம் கிராமத் தில் உள்ள பறவைகளை கணக்கீடு மற்றும் கண்டறிதல்  நிகழ்வு நடைபெற்றது. அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். திருப்பூர் இயற்கை  கழக தலைவர் ரவீந்திரனின் வழிகாட்டுதலின் படி, மாணவர் களை பறவைகள் நோக்கலுக்காக கிராமத்தின் உட்புறம் கிட்ட தட்ட 2.5 கிலோ மீட்டர் தூரம் ஒரு மணி நேரத்தில் பயணம்  செய்தனர். அப்போது ஊதா தேன் சிட்டு, அரசவால் ஈ பிடிப்பான், காட்டு கீச்சான், கருப்புத் தலை குயில் , கருங் கொண்டை நாகனவாய், பழுப்பு முதுகு கீச்சான், வால் காக்கை, குண்டு கரிச்சான் போன்ற 29 வகையான பறவை களை கண்டறிந்தனர். பறவைகளின் கழுத்தின் நீளம், காலின்  உயரம், கண்ணின் நிறம், பறக்கும் விதம் போன்றவையின் மூலம் பறவைகளை காணலாம் என்று ரவீந்திரன் கூறினார்.  மேலும், ஆண் - பெண் பறவைகளை எவ்வாறு கண்டறிவது,  பருவநிலை மாற்றத்தால் பறவைகள் அழிவதை தடுக்க வேண்டும், மாணவ, மாணவிகள் பறவை நோக்கலில் ஈடு படவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன டைந்தனர். பிறகு மாணவ, மாணவிகள் தூய்மை பணியில்  ஈடுபட்டனர்.  இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

;