districts

img

டெல்லியில் போராட்டம் நடத்த பென்சனர் கூட்டமைப்பு முடிவு

திருப்பூர், ஜூன் 29 - திருப்பூர் மாவட்ட பென்சனர்கள் கூட்ட மைப்பின் மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம்  வெள்ளிக்கிழமை திருப்பூர் பத்மாவதிபு ரத்தில் மாவட்டத் தலைவர் சி. ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத் தில் மாவட்டச் செயலாளர் வி.கோபால்,  மாவட்டப் பொருளாளர் எம்.தேவராஜ்,  துணைத்தலைவர்கள் கே.நடராஜன், எஸ். ஜோசப், துணைச் செயலாளர்கள் கே.அவிநா சியப்பன், எஸ்.கருப்புசாமி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் கோவை பிரிக்கால் செல்வராஜ் பங்கேற்றார்.  இதில், பென்சன் பெறக்கூடிய அனைத்து தொழிலாளர்களுக்கும் கடந்த 2014 ல் மன் மோகன் சிங் அரசு அறிவித்ததும், அதை சுப் ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டதும்,  பின்னர் டெல் லியில் உள்ள பி.எப் அகில இந்தியக் கமிட்டி  ஏற்றுக்கொண்ட குறைந்தபட்ச பென்சன் மாதந்தோறும் 3ஆயிரம் ரூபாயை உடனடியாக ஒன் றிய அரசு வழங்க வேண்டும்.  இந்தக் கோரிக்கையை வலி யுறுத்தி வருகின்ற ஆகஸ்ட் மாதம் 6 ,7, 8 ஆகிய தேதி களில் டெல்லியில் நாடாளு மன்றத்திற்கு முன்பாகவும், தொழிலாளர் நல அமைச்சர் அலுவலகம்  முன்பாகவும், டெல்லி பி.எப். தலைமை  அலுவலகம் முன்பாகவும் தொடர்ந்து மூன்று நாள் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப் பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மில்களில் பணிபுரிந்த பென் சன் தொழிலாளர்கள் டெல்லி ஆர்ப்பாட்டத் தில் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகிகளி டம் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் இருந்த மூத்த  குடிமக்களுக்கு 50 சதமான ரயில் கட்டண  சலுகை நிறுத்தி வைத்துள்ளதை பாஜக  அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.   நாடு முழுவதும் ஓய்வு பெற்ற அல்லது விருப்ப ஓய்வு பெற்ற அனைத்து தொழிலா ளர்களுக்கும் இ.எஸ்.ஐ வசதியை செய்து கொடுக்க வேண்டும் என டெல்லி ஆர்ப்பாட் டத்தில் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டு ள்ளது.

;