districts

img

பொங்கல் திருநாளில் வங்கி தேர்வா? வாலிபர் சங்கம் ஆவேசம்

கோவை, ஜன.7- தமிழர்களின் பண்பாட்டு திரு விழாவான பொங்கல் திருநாளில் வங்கித் தேர்வை அறிவித்த ஸ்டேட்  பேங்க் ஆப் இந்தியாவின் செய லுக்கு கண்டனம் தெரிவித்து, மறு  தேதியில் தேர்வு நடத்த வலியு றுத்தி வெள்ளியன்று இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் ஆவேச  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப  வேண்டும் என வங்கி தொழிற் ்சங்கமும், வாலிபர் சங்கம் உள் ளிட்ட அமைப்புகள் தொடர்ச்சியாக  போராட்டங்களில் ஈடுபட்டு வரு கிறது. இந்நிலையில், இப்பணியி டங்களை நிரப்புவதற்காக முதன்மை தேர்வில் தேர்ச்சி விபரங் களை கடந்த அக்டோபர் மாதம்  வெளியிட்டது. இந்நிலையில்  தேர்வில் தேர்ச்சியடைந்தவர் களின் முதல் நிலை தேர்வு அறிவிக் கப்பட்டுள்ளது.

இத்தேர்வு பொங்கல் திருநாளான ஜன.15 ஆம் தேதி அறிவித்துள்ளது.  தமிழர்களின் பண்பாட்டு விழா வான பொங்கல் திருநாளில் உள்ளூர் விடுமுறை கணக்கில் கொள்ளாமல் ஒன்றிய அரசின்  கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித் துள்ளது. தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மாறாக  ஒன்றிய அரசும், அதன் நிறுவ னங்களும் செயல்பட்டு வருகிறது. இதன்ஒருபகுதியாகத்தான் பொங்கல் விழாவில் தேர்வை ஸ்டேட் பேங்க் அறிவித்துள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின்  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்  சு.வெங்கடேசன் கண்டனம் தெரி வித்துடன்,  தேர்வை மறு தேதியில்  நடத்த வேண்டும் என வலியுறுத்தி யுள்ளார். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தி யாவின் நடவடிக்கையை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலக்குழு வும் கடும் கண்டனத்தை தெரி வித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடு மாறு அறைகூவல் விடுத்திருந்த்து. இதன்ஒருபகுதியாக கோவை யில் வெள்ளியன்று இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் அருகில் ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் மா.விவேகா னந்தன் தலைமை தாங்கினார்.  கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் அர்ஜுன்  உரையாற்றினார். மாவட்ட பொரு ளாளர் தினேஷ் ராஜா நன்றி கூறி னார். ஆர்ப்பாட்டத்தில் திரளான இளைஞர்கள் பங்கேற்று கோரிக்கை வலியுறுத்தி முழக்கங் களை எழுப்பினர்.