districts

img

மாணவர்களுக்கு வங்கி பற்று அட்டை

ஈரோடு, ஆக.13- தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 128  மாணவர்களுக்கு வங்கி பற்று அட்டைகளை அந்தியூர்  சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார். ஈரோடு மாவட்டம், அந்தியூரில் அரசு கலை மற்றும்  அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் அந்தியூர் அரசு கலை மற்றும்  அறிவியல் கல்லூரியில் பயிலும் 128 மாணவர்களுக்கு வங்கி பற்று அட்டைகளை அந்தியூர் சட்டமன்ற உறுப்பி னர் அந்தியூர் ஏ.கோ.வெங்கடாசலம் வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில், அந்தியூர் அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரி முதல்வர் பொன்னுச்சாமி, பேரூராட்சி மன்றத் தலைவர் எம். பாண்டியம்மாள், பேரூர் கழகச் செயலாளர் எஸ்.கே.காளிதாஸ், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஏ.சி.பழனிச்சாமி பொதுக்குழு உறுப்பினர் மாதேஸ்வரன், சிறுபான்மையின அணி  மாவட்டத் தலைவர் என்.கே.செபஸ்தியான், ஈரோடு வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப் பாளர் எஸ்.பி.ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.