districts

img

அத்திக்கடவு - அவிநாசி திட்டம்: விடுபட்ட குளங்களுக்கு நீர் வழங்கிடுக

மேட்டுபாளையம், ஆக.28- அத்திக்கடவு - அவிநாசி திட்டத் தில் சிக்காரம்பாளையம் ஊராட்சி யில் உள்ள குளம், குட்டைகளுக்கு நீர் வழங்க வேண்டும் என தமிழக முதல் வருக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.  இதுகுறித்து காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிக்காரம்பாளை யம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதா வது: கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் தாலூக்காவிற்குட்பட்ட காரமடை ஊராட்சி ஒன்றியம், சிக்கா ரம்பாளையம் ஊராட்சியினை அத்திக் கடவு - அவிநாசி திட்டத்தில் முழுமை யாக இணைக்க உதவிட வேண்டும். தற்போது  சிக்காரம்பாளையம்,  ஊராட் சியில் கன்னார்பாளையம், காளட்டி யூர் மற்றும் பெள்ளாதி ஆகிய மூன்று  குளங்களுக்கு மட்டுமே அத்திக் கடவு - அவிநாசி திட்ட குழாய்கள் பதித்து சோதனை ஓட்டம் நடக்கிறது. இத்திட்டக்குழாய்கள், சிக்காரம்பா ளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சென் னிவீரம்பாளையம், சிக்காரம்பாளை யம், பெரியபடியனூர், காளட்டியூர் வழியாக செல்கிறது. ஆனால், குழாய் செல்லும் பாதையில், சென்னிவீராம் பாளையத்தில் மூன்று குளங்கள், பெரியபடியனூரில் இரண்டு குளங் கள், மற்றும் கள்ளிபாளையம், சண் முகாபுரத்தில் தலா ஒரு குட்டை என மொத்தம் 5 பெரிய குளங்கள் மற்றும் 2 குட்டைகள் நீரில்லாமல் பல ஆண்டு களாக வறண்டு கிடக்கின்றன.  ஆனால், இக்குளங்கள் மற்றும்  குட்டைகள் அனைத்தும் தூர்வாரப் பட்டு நல்ல நிலையில் உள்ளன. இப் பகுதியில் பருவ மழையை நம்பி விவ சாயம் நடைபெற்று வருகிறது. இந்த  குளங்கள் மற்றும் குட்டைகளில் நீர் நிரம்பினால் 20 ஆயிரத்திற்கும் மேற் பட்ட பொது மக்களின் குடிநீர் பிரச்ச னைக்கும் தீர்வு ஏற்பட்டு நிலத்தடி நீர் மட்டம் அதிகரத்து விவசாய கிணறு களில் தண்ணீர் கிடைப்பதோடு கால் நடைகளுக்கும் நீர் கிடைக்கும். எனவே. இவ்வழியாக செல்லும் அத்திக்கடவு - அவிநாசி திட்ட குழா யிலிருந்து காய்ந்து கிடக்கும் இப் பகுதி குளங்கள் மற்றும் குட்டைக ளுக்கு இணைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள் ளது. இந்நிலையில், திங்களன்று சிக் காரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வறண்டு கிடக்கும் குளங் கள் மற்றும் குட்டைகளை ஊராட்சி தலைவர் மற்றும் பொதுப்பணித்துறை  அதிகாரிகள் நேரில் சென்று பார்வை யிட்டு நீர் நிரப்பும் சாத்தியங்கள் குறித்து ஆய்வு நடத்தினர்.