திருப்பூர், ஜன.13- முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன் னிட்டு, சட்டமன்ற நாயகர் கலைஞர் என்ற தலைப்பில் கருத் தரங்கம் நடைபெற்றது. முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கம் அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், திருப்பூர் மாநக ராட்சி மேயர் ந.தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் வெள்ளியன்று மாநகராட்சி, புனித ஜோசப் மேல்நிலைப்பள் ளியில் கலந்து கொண்டு விழா பேரூரையாற்றினர். இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற பேரவை கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன் அவர்கள், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவ லர் ந.கீதா, உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் தொடர்புடைய அரசு அலு வலர்கள் கலந்து கொண்டார்கள்.