districts

img

காதுகள் பாவமில்லையா? மாற்றுதிறனாளிகளை ஏமாற்றிய அண்ணாமலை

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள காது கேட்கும் கருவிகளை பாஜக வழங்குவதாக அண்ணாமலை அறிவித்த நிலையில், சீன தயாரிப்பான அந்த Cyber Sonic காது கேட்கும் கருவிகள் ரூ.345-க்கு தான் விற்கப்படுகிறது என்பது அம்பலமாகியிருக்கிறது.

பாஜக கோவை தெற்கு மாவட்டம் சார்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கோவை,  சுந்தராபுரம் பகுதியிலுள்ள ஒரு தனியார் திருமணம் மண்டபத்தில் நடந்தது. 

இதில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மொத்தம் 95 மாற்றுத்திறனாளிகளுக்கு காது  கேட்கும் கருவி, செயற்கைக் கால் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசும்போது, “ஒவ்வொரு மெஷினும் 10,000 ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடிய மெஷின் 95 பேருக்கு வழங்கப்படுகிறது என்றார்.

அதில் காது கேளாதோருக்கு Cyber Sonic என்ற நிறுவனத்தின் கருவி வைக்கப்பட்டிருந்தது.  பாஜக தலைவர் அண்ணாமலை ரூ.10 ஆயிரம் மதிப்பிலான காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டன என கூறிய நிலையில், ஆனால், அந்த  Cyber Sonic காது கேட்கும் கருவிகள் அமேசானில் ரூ.345-க்கு தான் விற்கபடுகிறது என்பது அம்பலமாகியிருக்கிறது.