districts

img

தருமபுரி பள்ளி மணவர்களுக்கு தொல்லியல் சுற்றுலா

தருமபுரி, மார்ச் 19- தருமபுரியில் பள்ளி மாணவர்க ளுக்கான தொல்லியல் சுற்றுலா  நடை பெற்றது. தகடூர் அதியமான் வரலாற்று சங் கம் சார்பில் தருமபுரி பள்ளி மாணவர்க ளுக்கு தொல்லியியல் குறித்த சுற்றுலா பயணம் நடைபெற்றது. இதில்  மாணவர்களுக்கு தொல்லியல் குறித்து தொல்லியல் துறை உதவி இயக்குநர் (ஓய்வு)  தி.சுப்பிரமணியன், தருமபுரி தொல்லி யல் அலுவலர் பிரசன்னா, தலைமை யாசிரியர் அன்பழகன், அதியமான் வரலாற்று சங்க நிர்வாகிகள் ஆர்.சிசு பாலன், ராஜன் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு தொல்லியல் குறித்து எடுத்துரைத்தனர். மேலும், தருமபுரி பகுதியின் பெருமைகளை யும், தொன்மைகளையும் எடுத்து ரைக்கும் தருமபுரி தொல்லியல் அருங் காட்சியகம், தொல்பழங்காலச்சான்று கல்வெட்டுகள், சிற்பங்கள், நடுகற் கல், அகழாய்வு செய்யப்பட்ட இடங்க ளில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருள் ஆகியவற்றை மாணவர்கள் பார்வையிட்டு கள ஆய்வு செய்தனர். குறிப்பாக, சோழர் கால கோயில், அதியமான் கோட்டை, சென்றாய பெருமாள் கோயில், சமணர் கால கோயில், சிற்பம்  ஆகியற்றை பார் வையிட்டு களஆய்வு செய்தனர். இதேபோல், கிபி 8 ஆம் நூற்றாண் டில் கட்டப்பட்ட  தருமபுரி கோட்டை கோயில், சிற்பங்கள். ஓவியங்கள் ஆகி யவற்றை மாணவர்கள்  கள ஆய்வு செய்தனர். இந்த தொல்லியல் சுற்றுலா பயணத்திற்கு சாஹிப் பயிற்சி மையத் தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந் தது. இதில் சுமார் 80 மாணவர்கள் பங் கேற்றனர்.