districts

img

வாக்கு பதிவு நாளில் பணியாற்றக்கூடிய அரசு அலுவலர்களுக்கு பணி நியமன கடிதம்

திருப்பூர், மார்ச் 22- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட் டசபை தொகுதிகளில், வாக்கு பதிவு  நாளில் பணியாற்றக்கூடிய அரசு அலு வலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர் ஆசி ரியர்களுக்கான பணி நியமனக் கடிதம்  வழங்கும் பணிகள் திருப்பூர் மாவட்ட  ஆட்சியர் வெள்ளியன்று அலுவலகத் தில் மேற்கொள்ளப்பட்டது.  தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை ஒட்டி, அனைத்து மாவட்டங்களிலும்  தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர்  மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நாளன்று பணியாற்றக்கூ டிய அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள் என மொத்தம் 12,500 பேருக்கு பணி  நியமனக் கடிதம் வழங்கப்பட உள்ளது. தற்பொழுது இவர்களுக்கான பணி நியமனக் கடி தத்தை பிரித்து அந்தந்த சட்டசபை தொகுதி வாரியாக வழங்குவதற்கான பணிகள் திருப் பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை திருப்பூர் மாவட்ட வரு வாய் அலுவலர் ஜெய் பீம் மேற்பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.