districts

img

நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத நூற்பாலை: ஆட்சியரிடம் முறையீடு

ஈரோடு, ஜுலை 8- நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தொழிலாளர்களை வஞ் சிக்கும் பாரியூர் அம்மன் நூற்பாலை மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள்  மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், பொலவக்காளி பாளையத்தில் பாரியூர் அம்மன் ஸ்பின்னிங் மில் என்னும் நூற் பாலை இயங்கி வருகிறது. கடந்த 1997 ஆம் ஆண்டு இந்த  ஆலையில் ஊதிய உயர்வு கோரிக்கை எழுந்து, வேலை  நிறுத்தமும் நடைபெற்றது. இதன் விளைவாக 63 தொழி லாளர்கள் வாய்மொழியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் நிர்வாகத்தை அணுகி பலமுறை கேட்டும், நிர்வாகம் அவர்களுக்கு வேலை  கொடுக்கவில்லை. இதனையடுத்து, தொழிலாளர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், 2003 ஆண்டு ஆகஸ்டில்  இவ்வழக்கின் தீர்ப்பளிக்கப்பட்டது.  அதில் வேலை நீக்கம் செய்யப்பட்டு, வழக்கு தொடுத்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் இழப்பீடாக 3 மாதங் களுக்குள் வழங்க வேண்டும். தாமதமானால் 6 விழுக்காடு வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனை ஏற்காத பாரியூர் அம்மன் ஸ்பின்னிங் மில் நிர் வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய் தது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தொழிலாளர் நீதிமன்றத் தில் தங்களுக்கு ஆதரவான தீர்ப்பினை பெற்றாலும், முழுமை யான நியாயம் பெறவில்லை. எனவே, உயர்நீதிமன்றத்தில் பணி தொடர்ச்சியுடன் வேலை, வேலை இழந்த நாட்க ளுக்கு முழு பின் சம்பளமும் வழங்க வேண்டும் என வழக்கை  எதிர்கொண்டனர். இந்த வழக்கின் தீர்ப்பு 2023 அக்டோப ரில் வழங்கப்பட்டது. அதில் தொழிலாளர் நீதிமன்றம் அளித்த  தீர்ப்பையே நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி நிவாரணம் பெற பாதிக்கப்பட்ட தொழிலா ளர்கள் ஆலை நிர்வாகத்தை அணுகினர். ஆனால் ஆலை நிர் வாகம் நிவாரணம் அளிக்க முன்வரவில்லை. இதனால் பாதிக் கப்பட்ட தொழிலாளியான சூரம்பட்டிவலசைச் சேர்ந்த என். எஸ்.ரவி மாவட்ட ஆட்சியரை குறைதீர்க்கும் நாள் கூட்டத் தில் சந்தித்து, நீதிமன்ற தீர்ப்பின்படி நிவாரணமாக ரூ.20 ஆயிரம் கடந்த 1997 ஏப்ரல் முதல் 6 விழுக்காடு வட்டியு டன் சேர்த்து வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு மாய் முறையிட்டார். அவரைப்போல இதர பாதிக்கப் பட்ட தொழிலாளர்களும் மனு கொடுத்தனர் சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், செயலா ளர் எச்.ஸ்ரீராம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.