districts

img

மனித குல முன்னேற்றத்தில் சோசலிச நாடுகள்தான் அனைத்திலும் முன்னிலை

திருப்பூர் டிச. 8- முதலாளித்துவ நாடுகளில் அரசி யல் சாசனம் அனைத்து மக்களுக்குமா னது என்ற போர்வையில் பெரும் செல் வந்தர்களுக்காக உள்ளது என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கல்வி குழு உறுப்பினர் அன்வர் உசேன்  தெரிவித்தார்.  அரசியல் சாசன விழுமியங்களும், கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பும் என்ற  தலைப்பில் காலை நேர தொடர் வகுப்பு கள் திருப்பூர் மாவட்ட குழு அலுவலகத் தில் நடைபெற்று வருகிறது. அதன்படி  வியாழனன்று நடைபெற்ற வகுப்பில் கட்சியின் மாநில கல்வி குழு உறுப்பினர்  அன்வர் உசேன் பங்கேற்று பேசுகை யில், முதலாளித்துவ அரசியல் சட்டங் கள் அனைத்து மக்களுக்குமானது என  ஏட்டளவில் மட்டுமே உள்ளது. செல்வக்  குவிப்பு தடுக்கப்பட வேண்டும், தீண் டாமை ஒழிக்கப்பட வேண்டும், என நமது  அரசியல் சட்டம் கூறுகிறது. ஆனால் ஒரு புறம் அதானி, அம்பானி போன்ற கார்ப்ப ரேட்டுகள் உலக பணக்காரர்கள் பட்டிய லில் முன்னேறிக் கொண்டும், மறுபுறம்  பெரும் பகுதி மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இதுவே சோசலிச நாடுகளின் அர சியல் சட்டங்கள் அனைத்தும் மக்க ளிடையே விவாதங்களுக்கு பின்னர் தான் அங்கீகரிக்கப்படுகின்றன.1936 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் அரசி யல் சட்டம் 6 மாதங்கள் பொது விவா தத்திற்கு விடப்பட்டது.

5.5 கோடி மக்கள்  விவாதங்களில் பங்கேற்று, 43 ஆயிரம் திருத்தங்கள் செய்யப்பட்டு அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்டது. 2013  ஆம் ஆண்டு வியட்நாமில் 63 மாகாணங் களில் இருந்து 1.8 கோடி மக்களின்  கருத்துக்களையும் ஆலோசனைக ளையும் உள்வாங்கி தான் அரசியல் சாச னம் திருத்தப்பட்டது. மேலும் கியூபா வில் 2019 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட அர சியல் சட்டம் நான்கு மாதங்கள் பொது விவாதம் செய்யப்பட்டு, ஒரு லட்சத்து 333,681 கூட்டங்கள் நடத்தப்பட்டு 2125  நேரடி கலந்தாய்வுகள் மேற்கொண்டு 26  லட்சம் பேர் பொது விவாதத்தில் பங் கேற்று 9600 திருத்தங்கள் முன்மொழி யப்பட்டு, பொது வாக்கெடுப்பு நடத்தி 91% பேரின்  ஆதரவுபெற்று தான் சோச லிஸ்ட் கியூபாவின் அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டது என்றார். அனைத்து சோசலிச  தேசங்களிலும் பொதுத்துறை நிறுவனங்கள்தான் முக் கிய பங்காற்றுகிறது.  ஃபார்ச்சூன் இதழ்  வெளியிட்ட மிகப்பெரிய 500 நிறுவனங் களின் பட்டியலில் 124 சீன நிறுவனங்கள்  இடம் பெற்றுள்ளது.

அவற்றில் 95 நிறு வனங்கள் சீன அரசு நிறுவனங்கள். சீனா வில் 1 லட்சத்தி 50 ஆயிரம் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. அதில் 77 கோடி ஊழியர்கள் பணியாற்றுகின்றார்கள். ஆனால் இந்தியாவில் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள் வெறும் 220 தான் உள்ளது.  மேலும் மனித வளக் குறி யீட்டிலும் சோசலிச தேசங்கள் தான் முன் னிலையில் உள்ளது. சீனாவில் 0.6% மக் கள்தான் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள் ளார்கள். வியட்நாமில் 1.9% கியூபாவில்  பூஜ்ஜியம் சதவீதம். ஆனால் இந்தியா வில் 22.5% மக்கள் வறுமை கோட்டிற்கு  கீழ் உள்ளார்கள். சோசலிச நாடுகளில்  நாடாளுமன்றங்களில் பெண்களின் பங் களிப்பு அதிகமாக உள்ளது. கியூபா நாடாளுமன்ற உறுப்பினர்களின் 53 சத வீதம் பெண்கள், வியட்நாமில் 30 சதவீ தம் பெண்கள், சீனாவில் 25 சதவீதம்  பெண்கள் உள்ளனர். ஆனால் இந்தியா வில் பெண்கள் பிரதிநிதித்துவம் 13 சத வீதம் தான். பாலின சமத்துவ குறியீடு  சீனாவில் 80 சதவீதமாகவும், வியட்நா மில் 71 சதவிகிதமாகவும், கியூபாவில் 70 சதவிகிதமாகவும், இந்தியாவில் 51  சதவிகிதமாகவும் உள்ளது. இதிலும்  சோசலிச நாடுகளில் தான் முன்னிலை யில் உள்ளது. சோசலிச தேசங்களின்  அரசியல் சட்டங்கள் உழைக்கும் மக்க ளுக்கானதாக உள்ளன. அதுவே முதலா ளித்துவ நாடுகளின் அரசியல் சாசனம்  அனைத்து மக்களுக்குமானது என்ற  போர்வையில் பெரும் செல்வந்தர்களுக் காக உள்ளது என்று  இந்த புள்ளி விவ ரம் தெளிவுப்படுத்துகிறது என்றார்.

;