districts

img

“அந்தியூர் நம்பிக்கை நூலகம் திறப்பு”

ஈரோடு, மே 6- அந்தியூர் பேரூராட்சி 3 ஆவது வார்டில் “அந்தியூர் நம்பிக்கை நூல கம்”  என்ற பெயரில் முதல் நூலகம் துவங்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூ ராட்சி 3 ஆவது வார்டு கவுன்சில ராக மார்க்சிஸ்ட் கட்சியின் எஸ்.கீதா சேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே சிபிஎம் வெற்றி பெற்ற வார்டில் முதலில் நூலகத்தை துவக்கு வது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மாமேதை காரல் மார்க்ஸ் பிறந்த தினமான மே 5 ஆம் தேதி யன்று “அந்தியூர் நம்பிக்கை நூலகம்” என்ற பெயரில் நூலகம் துவக்கப் பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிபிஎம் கவுன்சிலர் எஸ்.கீதாசேகர் தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன் வரவேற்புரையாற்றினார். காசிபாளையம் பேரூராட்சியின் முன் னாள் தலைவர் கே.துரைராஜ் நூல கத்தை திறந்து வைத்தார். மேலும், இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஷானவாஷ், பேரூராட்சி மன்ற உறுப்பி னர்கள் சரஸ்வதி, பத்மநாபன், விதொச மாவட்ட தலைவர் ஆர்.விஜயராக வன், தாலுகா செயலாளர் எஸ்.வி.மாரி முத்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தாலுகா செயலாளர் ஏ.கே.பழனிச் சாமி, மீன்பிடி கூட்டமைப்பின் மாநில குழு உறுப்பினர் எல்.சேகர் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவாக, நூலகக்குழு நிர்வாகி எஸ்.செபாஸ்டியன் நன்றி கூறினார்.