districts

img

ஆண்டுதோறும் வால்பாறையில் கோடை விழா அமைச்சர் செந்தில் பாலஜி பேட்டி

கோவை, மே 29- வால்பாறையில், இனி ஆண்டு தோறும் கோடை விழா நடத்த நடவ டிக்கை எடுக்கப்படும் என மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கோவை மாவட்டம், வால்பாறை யில் கோடை விழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இதில், வனத்துறை சார்பில் புலி, சிறுத்தை மற்றும் வனவிலங்குகளின் உருவ பொம்மைகள் இடம்பெற்றன. மேலும்,  தோட்டக்கலைத்துறையின் சார்பில் மலர் கண்காட்சி நடைபெற்றது. சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக  கோடை விழாவையொட்டி பரத நாட்டியம், மிருதங்கம் வாசித்தல் உள் ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.  கோடை விழாவின் இறுதி நாளான  ஞாயிறன்று நடைபெற்ற நிகழ்வில்,  மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு  மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச் சர் வி.செந்தில் பாலாஜி பங்கேற்றார். இதில், முன்னதாக, ரூ.30.30 கோடி மதிப்பீட்டில் 4 புதிய வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 13.55 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 7  பணிகளைதொடங்கிவைத்து,

111 பய னாளிகளுக்கு ரூ.39.11 லட்சம் மதிப்பி லான அரசு நலத்திட்ட உதவிகளை  வழங்கினார். மேலும், பொதுமக்க ளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா,  பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண் டாம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளை பாராட்டி பரிச ளித்து கௌரவித்தார். மேலும், மாண வர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கினார். இதேபோன்று வால் பாறை கோடை விழாவினை முன்னிட்டு  நடைபெற்ற ஆன்லைன் புகைப்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை அமைச்சர் வழங்கினார். இவ்விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப் பினர் கு.சண்முகசுந்தரம், பொள்ளாச்சி  சார் ஆட்சியர் சி.பிரியங்கா, வால் பாறை நகர் மன்ற தலைவர் செ.அழகு சுந்தரவள்ளி, நகராட்சி ஆணை யாளர் (பொ) செ.வெங்கடாசலம் உள்ளிட்ட பலர்கலந்துகொண்டனர். முன்னதாக, வால்பாறையில் மூன்று  நாட்கள் நடைபெற்ற கோடை விழா வில் ஆயிரக்கணக்கான மக்கள் பங் கேற்று உற்சாகமாக கண்டு களித் தனர்.

இதனையடுத்து அவர் செய்தி யாளர்களிடம் பேசுகையில், கடந்த பத்தாண்டுகளாக வால்பாறையில் கோடை விழா நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு கோடை விழா நடத்த  தமிழ்நாடு முதல்வர் அனுமதி அளித் துள்ளார். இதற்கு இங்குள்ள மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், வால்பாறையில் சாலை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வால்பாறை பகுதியில் புறநகர் பேருந்துகள்தான் அதிகமாக வருகின்றன. சாதாரண நகர பேருந்துகள் குறைவாகவே வருவதால் நகர பேருந்துகளில் மகளி ருக்கு கட்டணமில்லா பயணம் என்பது இப்பகுதியில் செயல்படுத்த முடியாத சூழ்நிலை இருந்து வருகின்றது. இது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று, இப்பகுதி மகளி ருக்கும் கட்டணமில்லா பேருந்து திட் டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்படும். மேலும், வால்பாறை சிறந்த நகராட்சியாக தரம் உயர்த்த தேவையான நிதிகளை ஒதுக்க முதல்வர் தயாராக உள்ளார். வால் பாறையில் இனி வருடம் தோறும் கோடை விழா நடத்த மாவட்ட நிர் வாகம் நடவடிக்கை எடுக்கும் என் றார்.  மேலும், வருமானவரித்துறை சோதனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில், வருமான வரித்துறைக்கு தனக்கும் சம்பந்தம் இல்லை. அவர்கள் என் வீட்டில் சோதனை மேற்கொள்ளவில்லை என் றார்.