சேலம், பிப், 3 - சேலம் பெரியார் பல் கலைக்கழகத்தில் திங்க ளன்று அண்ணா நினைவுச் சொற்பொழிவில் புலவர் பொ.வேல்சாமி உரையாற்றி னார். பெரியார் பல்கலைக்க ழகத்தில் செயல்பட்டுவரும் பேரறிஞர் அண்ணா இருக்கை சார்பில், அண்ணாவின் 56 ஆவது நினைவு நாளையொட்டி சிறப்புச் சொற்பொழிவு, முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஆய்வு மையத்தில் நடைபெற்றது. இதில், பதிவாளர் பெ.விஸ்வநாதமூர்த்தி மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவியர் பேரறிஞர் அண்ணா திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பேரறிஞர் அண்ணாவின் பன்முக ஆளுமை என்ற தலைப் பில் புலவர் பொ.வேல்சாமி பேசுகையில், “சமூகத்தின் இரு வேறு பக்கங்களையும் நுட்பமாக தன்னுடைய படைப்புக ளில் எடுத்துக் காட்டியவர் அண்ணா. அப்படைப்புகள், சமூகத் தின் பிற்போக்குத்தனங்களை வெளிப்படுத்துவதாக அமைந் திருந்தன. தொடக்க காலத்தில் மணிமேகலை, நீலகேசி முத லான பெண் தத்துவியலாளர்கள் இருந்தனர். ஆனால் இடைக் காலங்களில் பெண்களுக்கான உரிமை எங்கே போனது என்ற கேள்வியைக் கேட்டு, பெண்ணியச் சிந்தனைகளைத் தன்னுடைய படைப்புகள் வழியாக உருவாக்கினார். எழுத்தை மட்டும் படிப்பது கல்வியல்ல. விமர்சன ரீதியான கல்வியை மாணவர்கள் பெறவேண்டும் என்பதே அண்ணா வின் எதிர்பார்ப்பாக இருந்தது. உதாரணமாக அண்ணாவின் பரந்துபட்ட வாசிப்பை நாம் குறிப்பிடலாம். சிந்தனை என் பது ஜனநாயக ரீதியான பண்பு மேலோங்குவதுதான் என்ற நோக்கில் தான் உருவாக்கிய படைப்புகளின் வழி சாதா ரண மக்களையும் தன் வாசகராக்கினார். எளிய மக்களை ஆட்சி, அதிகாரமிக்கவர்களாக அண்ணா மாற்றிக் காட்டி னார். சாதாரண மனிதர்களும் ஆட்சியாளர்களும் ஒன்று தான் என்பதைத் தன் அரசியல் தளத்தில் நிரூபித்துக் காட்டிய வர் அண்ணா” என்று அவர் பேசினார்.