தருமபுரி, பிப்.1- தருமபுரி அஞ்சலி டெக்ஸ்டைல்ஸில் பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் மெயின்ரோடு பகுதி யில் அஞ்சலி டெக்ஸ்டைல்ஸ் வியாபரா நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சார்பில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு, பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜவுளி வாங்கும் அனைவருக்கும் சிறப்பு கூப்பன் வழங்கப்பட்டிருந்தது. இந்த கூப்பன்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசளிக் கும் நிகழ்வு நடைபெற்றது. முதல் பரிசு எல்இடி டிவி, இரண் டாம் பரிசாக ராஜா ராணி பீரோ மூன்றாம் பரிசாக பிரிட்ஜ் மற்றும் நான்காம், ஐந்தாவது என தொடர்ந்து பத்து வரை சிறப்பு பரிசு கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் அஞ்சலி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனர் எஸ். கருப்பண்ணன்,தொழிலதிபர் சக்திவேல், மணி, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.