districts

img

திருப்பூரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக்.12- காலி பணியிடங்களை நிரப்பக் கோரி தமிழ்நாடு அங் கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் திருப்பூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி னர். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின்  மாவட்டத் தலைவர் சி.சித்ரா தலைமையில் புதனன்று நடை பெற்ற இந்த போராட்டத்தில், காலி பணியிடங்களை நிரப்பா மல் கூடுதல் பொறுப்பு என்கிற பெயரால் பணிச்சுமையை அதி கரிப்பதை கைவிட வேண்டும், செயல்படாத கைப்பேசிகளை  திரும்ப பெற வேண்டும், அனைத்து பதிவேடுகளையும் அரசே  வழங்கிட வேண்டும், பிற துறை பணிகளை செய்யச் சொல்லி  வற்புறுத்தக் கூடாது. அலுவலர்கள் மூலம் ஊழயர்களை மிரட் டுவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தப்பட்டது. இதில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியா ளர் சங்க மாநில நிர்வாகி ஆர்.அனிதா, மாவட்டச் செயலாளர்  கே.சித்ரா சிஐடியு மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி, துணைத்தலை வர் பி.பாலன், ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில்  அங்கன்வாடி ஊழியர்கள் பெருந்திரளானோர் பங்கேற்றனர்.  முடிவில் எஸ்.ரகமத் நன்றி கூறினார்.