districts

img

நெரிசலில் சிக்கி தவித்த ஆம்புலன்ஸ்

மேட்டுப்பாளையம், செப்.15- மேட்டுப்பாளையம் பகுதியில் ஞாயிறன்று ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் சிக்கி தவித்தது. கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் பகுதி நீலகிரி மாவட்டத்தின் நுழைவுவாயிலாக உள்ளது. கோவை வழியாக வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் மேட்டுப்பாளை யம் பகுதியை கடந்தே உதகை போன்ற சுற்றுலாத் தலங்கள்  சென்றாக வேண்டும் என்பதால், தினசரி சராசரியாக 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் மேட்டுப்பாளையத்தை கடந்து சென்று திரும்புகின்றன. இந்நிலையில், சனி, ஞாயிறு  மற்றும் ஓணம் பண்டிகை, மிலாடி நபி போன்ற பண்டிகை  காலம் என்பதாலும், ஆவணி மாதம் கடைசி விசேஷ முகூர்த்த  நாள் என்பதாலும், மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை பகுதி களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில்,  அவ்வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றும் சிக்கி  தவித்தது. மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் எண்ணிக்கை  குறைவாக இருப்பதால் போக்குவரத்து நெரிசலை கட்டுப் படுத்த முடியாமல் காவல் துறையினர் திணறி வருகின்ற னர். கூடுதல் காவல் துறையினர் நியமித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க காவல் துறையினர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.