districts

img

ஏழைகளுக்கு சேவை செய்து நல்ல அடையாளத்தை பதிக்க வேண்டும்

தாராபுரம், அக்.16 – தாராபுரம் டாக்டர் அம்பேத்கர் பயிற்சி மையத்தில் படித்து அரசுப் பணிக்குத் தேர்வா னவர்கள், ஏழை, எளிய சாமானிய மக்க ளுக்கு நிறைவான சேவை செய்து நல்ல அடை யாளத்தைப் பதிக்க வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன் கூறினார். தாராபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கர் கல்வி  மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம்  செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் டிஎன்பிஎஸ்சி  குரூப் தேர்வுகளுக்காக  படித்து வருகின் றனர். இந்த மையத்தில் படித்து தேர்வெ ழுதிய மாணவர்களில் கிராம நிர்வாக அலுவ லர்களாக ராஜேஷ், யமுனா ஆகியோரும், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறையில் திவ்யா, கவியரசன் ஆகியோரும், சுகாதாரத்  துறையில் முகமது இஸ்மாயில், கல்வித் துறையில் மதன்குமார்,  ராஜ்குமார் ஆகி யோர் என 7 பேர் அரசு பணிக்குத் தேர்வாகி  பணி நியமனம் பெற்றுள்ளனர். பணி நியமனம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு  விழா தாராபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி அலுவலகத்தில் ஞாயிறன்று நடை பெற்றது. இவ்விழாவிற்கு மைய நிர்வாகி ஆ.மணி யன் தலைமை வகித்தார். மாணவர்கள் மற் றும் கல்வி மைய ஆசிரியர்களுக்கு தமிழ் நாடு ஆட்டோஸ் தங்கவேல், பொன்னுசாமி,  வெள்ளைச்சாமி, கண்ணுசாமி ஆகியோர்  

சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித் தனர். நிறைவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன் பேசினார். அப்போது நீட் தேர்வு பயிற்சி  மையங்கள் மற்றும் அரசு பணிக்கான தேர்வு  மையங்கள் முற்றிலும் லாப நோக்கத்திற்காக  செயல்பட்டு வருகிறது. குறிப்பாக நீட் தேர்வு  மையங்கள் இப்போது நீட்இண்டஸ்ட்ரி  ஆக மாறிவிட்டது. இதற்கிடையில்தான்  எந்தவித லாபநோக்கமும் இல்லாமல் செயல் பட்டு வரும் டாக்டர் அம்பேத்கர் பயிற்சி மையம் முற்றிலும் மக்களுக்கானது. இந்த  மையத்தில் படித்து தேர்வாகியுள்ள மாண வர்கள் தங்கள் பணிக்காலத்தில் ஏழை,  எளிய மக்களுக்கு நிறைவான சேவை செய்து  பணிக்காலத்தில் தங்களது நல்ல அடையா ளத்தை விட்டுச் செல்லவேண்டும் என்பதே இந்த மையத்தின் முக்கிய நோக்கமாகும் என  பல்வேறு வரலாற்றுரீதியான முன்மாதிரி களை எடுத்துரைத்து பேசினார். இதைத் தொடர்ந்து இந்த மையத்திற்கு பல்வேறு  வகையில் உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிபிஎம் தாலூக்கா செய லாளர் என்.கனகராஜ் மற்றும் ஆர்.நடராஜன், கி.மேகவர்ணன், ஆசிரியர்கள் குப்புசாமி,  பால்ராஜ், ராஜேந்திரன், தேர்வு மைய ஆசிரி யர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட் டிருந்தது.