districts

img

அம்மன் வேடமிட்டு ஆடிய ஆல்பர்ட் ராஜ்!

கோவை, ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த ஆல்பர்ட் ராஜ் என்பவர் அம்மன் வேடமிட்டு ஆடியது மதநல்லிணக்கத்தை பறைச்சாற்றுவதாக அமைந்தது.

கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 43-வது ஆண்டு சித்திரை திருவிழா நடந்து வருகிறது. 25-04-2023 அன்று காலை திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து செவ்வாயன்று இரவு ஏலேலங்கடியோ கலைக்குழுவினரின் கொம்பு ஊதுதல், மாடு ஆட்டம், மயில் ஆட்டம், பொய்க்கால் குதிரை, காவடி ஆட்டம், அம்மன் ஆட்டம், காளி ஆட்டம், கருப்புசாமி ஆட்டம் நடந்தது.

இதில், அந்த கலைக்குழுவில் சிவகங்கையை சேர்ந்த கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஆல்பர்ட் ராஜ் என்பவர் அம்மன் வேடமிட்டு ஆடியது அனைவரையும் ஈர்த்தது.இது மதநல்லிணக்கத்தை பறைசாற்றுவதாக அமைந்தது.