districts

img

ஆதனூர் கல்வட்டம் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிப்பு!

தருமபுரி, ஜூன் 29- பென்னாகரம் வட்டத்திற்குட் பட்ட ஆதனூர் பெருங்கற்கால நினைவு சின்னம், பாதுகாக்கப்பட்ட சின்னமாக தமிழ்நாடு அரசு அறி வித்தற்கு தகடூர் அதியமான் வர லாற்றுச் சங்கம் நன்றி தெரிவித் துள்ளது. தருமபுரி மாவட்டத்திலுள்ள தக டூர் அதியமான் வரலாற்றுச் சங்கம்,  2011 ஆம் ஆண்டு முதல் தகடூர் பகு தியில் தொடர்ந்து தொல்லியல் ஆய்வுகள், கருத்தரங்கள், பயில ரங்குகள் மற்றும் தகடூர் நாட்டின் தொல்லியல் வரலாறுகளை ஆவ ணப்படுத்தும் நூல்களை தொடர்ந்து  வெளியிட்டு வருகின்றது. தொல்லி யல் விழிப்புணர்வை பொதுமக்களி டம் ஏற்படுத்தும் வகையில் தொல் லியல் சுற்றுலாக்களையும் நடத்தி வருகின்றது. தகடூர் பகுதியில் உள்ள தொல்லியல் மற்றும் வர லாற்றுச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்று கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி யன்று சங்கத்தின் செயலாளர் ரா. செந்தில், தொல்லியல் துறையின்  அன்றைய ஆணையர் உதயசந்தி ரனை நேரில் சந்தித்து மனு அளித் தார். அதில், ஆதனுார் கல்வட்டம் (தமிழ்நாட்டில் இதுபோன்ற கல் வட்டம் வேறு எங்கும் இல்லை), திரு மல்வாடியில் உள்ள சுமார் 3000  ஆண்டுகளுக்கு முற்பட்ட குத்துக் கல், பங்குநத்தம் கிராமத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட பெருங்கற்கால கல்வட்டங்கள், கம்பைநல்லூர் பேரூ ராட்சி, வெதரம்பட்டியில் அமைந் துள்ள ஏழு சுத்துக்கோட்டை என்று அழைக்கப்படும் புதிர் நிலை சின் னம், தென்கரைக்கோட்டை (நல்ல  நிலையில் உள்ள மதில், அகழி,  ஆயுதக்கிடங்கு, கோவில்கள்) ஆகியவை தருமபுரி மாவட்டத்தில் உள்ளன. இந்நிலையில், பங்குநத் தம் பெருங்கால சின்னங்கள் அமைந் துள்ள இடத்தை பவர்கிரீட் நிறுவ னத்திற்காக அரசு கையப்படுத்திய தால் அழியும் நிலை ஏற்பட்டது. இத னால் உடனடியாக நடவடிக்கை  எடுக்க கோரிக்கை வைக்கப்பட் டது. இதனைத்தொடர்ந்து தமிழ் நாடு அரசு 2023 – 24 ஆம் ஆண்டு  நிதிநிலை அறிக்கையில், பங்குநத் தம் பெருங்கற்கால சின்னம் அமைந் துள்ள 24.85 ஹெக்டர் நிலத்தையும்,  இரண்டு சிறு காடுகளையும் புராதன சின்னங்கள் மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங் கள் மற்றும் எச்சங்கள் என்ற சட்டத் தின் கீழ் பாதுகாக்கப்பட்ட சின்ன மாக அறிவித்து, இரண்டு சிறு காடு களை சுற்றி பாதுகாப்பு வேலி  அமைத்துள்ளது. தொல்லியல் துறை மானியக் கோரிக்கையில், ஆதனூர் கல்வட்டம் பாதுகாக்கப் பட்ட சின்னமாக நிதி, மின்சாரம் மற் றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள் ளார். இந்நிலையில், ஆதனூர், பங் குநத்தம் பெருங்கற்கால சின்னங் களை பாதுகாக்கப்பட்ட சின்னமாக  அறிவித்த, தமிழ்நாடு முதல்வர் மற் றும், தொல்லியல் துறை அமைச்சர், தொல்லியல் துணை ஆணையர் ஆகியோருக்கு தகடூர் அதியமான் வரலாற்றுச் சங்கம் நன்றி தெரி வித்துள்ளது.

;