ஒன்றிய மோடி அரசு பொது சிவில் சட்டத்தை நினைவேற்றுவது குறித்த நடவடிக்கையை கண்டித்தும், மணிப்பூரில் கலவரத்திற்கு காரணமான பாஜகவின் மணிப்பூர் முதல்வர் பதவி விலக கோரியும், சேலத்தில் தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேடையின் ஒருங்கிணைப்பாளர் எம்.சேதுமாதவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகரச் செயலாளர் காஜா மைதீன், தமிழ்நாடு பௌத்த அறநெறியாளர்கள் சங்க சேலம் மாவட்டத் தலைவர் ஆர்.செல்வகுமார், ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் என். பிரவீன் குமார் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.