districts

img

தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதா?

கோவை, ஜூலை 4- கோவை மாநகராட்சி, மத்திய மண் டலத்திற்குட்பட்ட தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கண்டித்து கோவை ஆட்சியர் அலுவ லகம் முன்பு தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். கோவை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அரசு மருத்துவ மனைகளில் பணிபுரியும் பணியாளர்க ளுக்கு குறைந்தபட்ச கூலியாக 750 ரூபாய் வழங்க வேண்டும். தொகுப் பூதிய அடிப்படையில் பணியாளர்களை பணியமர்த்த வேண்டும். கோவை மாந கராட்சி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பல் வேறு தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக் கும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட சமூக நீதி தூய்மை பணியாளர்கள் சங்கத்தி னர் நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ் வமைப்பின் தலைவர் பன்னீர்செல் வம் தலைமையில், நடைபெற்ற போராட் டத்தையடுத்து காவல் துறையினர் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதன்பின் அனைவரும் கலைந்து சென் றனர்.

;