உதகை, அக்.7- மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டார் கிளப் சார்பில் ஊட்டியில் பழங்கால கார்களின் அணிவகுப்பு நடைபெற்றது. மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டார் கிளப் சார்பில் சென் னையில் இருந்து 35 பழங்கால கார்கள் கொண்டு வரப் பட்டிருந்தன. இந்த கார்கள் ஊட்டியில் உள்ள சிம்சன் நிறுவனத்தின் மைதானத்தில் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இத்துடன் ஊட்டியில் உள்ள பத்து பழங்கால கார்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின் இந்த கார்களின் அணிவகுப்பு நடந்தது. முன்னாள் காவல்துறை இயக்குநர் விஜயகுமார் இந்த அணிவகுப்பை துவக்கி வைத்தார். இந்த கார்கள் ஊட்டி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் சிம்சன் நிறுவனத்தின் மைதானத்திற்கு வந்து சேர்ந்தன. பழமை வாய்ந்த அம்பாசிடர், ஜாக்குவார், செவர்லெட், கிளிமத் , எம் ஜி , பியட் மற்றும் ஃபோர்டு உட்பட பல்வேறு கார்கள் இடம் பெற்றிருந்தன. இதனை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பகுதிகள் வியப்புடன் கண்டு ரசித் தனர்.