சாக்கு குடோனில் ஏற்பட்ட தீ விபத்து
நாமக்கல், பிப்.25- திருச்செங்கோட்டில் செயல்பட்டு வந்த சாக்கு குடோன் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ரூ.2 கோடி மதிப்பி லான பொருட்கள் தீக்கிரையாகின. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, சந்தைப்பேட்டை பகுதியில், கொல்லப்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவருக்கு சொந்தமான சாக்கு குடோன் செயல்பட்டு வருகிறது. இக்குடோனில் செவ்வாயன்று அதி காலை மூன்று மணியளவில் தீப்பிடித்து ஓடுகள் வெடித்து சிதறியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத் தினர் திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கும், குடோன் உரிமையாளரான பரமசிவத்திற்கும் தகவல் தெரி வித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர் கரிகாலன் தலைமையி லான, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். மளமளவென தீ பரவியதால், வெப்படை, குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்திலிருந்து வாகனங்கள் வரவழைக் கப்பட்டன. திருச்செங்கோடு நகராட்சி மற்றும் தனியார் தண் ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக தீயணைப்பு வீரர்கள் போராடினர். திடீர் தீ விபத்தால் குடோன் முழுவதும் சேதமானது. இவ்விபத்தில், ரூ.2 கோடி மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையாகின. திருச்செங்கோடு நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நூல் வெளியீட்டு விழா
நூல் வெளியீட்டு விழா நாமக்கல், பிப்.25- குமாரபாளையத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், ‘காவிரிக்கரையில் ஒரு கதை’ என்ற நூல் வெளியிடப்பட்டது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ரோட்டரி சங்கம் மற்றும் குமாரபாளையம் கிளை நூலக வாசகர் வட்டமும் சார்பில், கேசவ மூர்த்தி ராஜகோபாலனின் ‘காவிரிக்கரையில் ஒரு கதை’ என்ற நூல் வெளியீட்டு விழா செவ்வாயன்று குமார பாளையம் ரோட்டரி மஹாலில் நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் சண்முகம், செயலாளர் கதிர்வேல் தலைமை வகித்த னர். விஜயா பதிப்பக நூலாசிரியர் எழுத்தாளர் அரங்க இல. வள்ளியப்பன் நூலை திறனாய்வு செய்து உரையாற்றினார். எக்ஸல் கல்வி குழுமத்தின் நிறுவனர் நடேசன் நூலை வெளி யிட, ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் பெற்றுக்கொண்டார். தென்னிந்திய ஜவுளி தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்தின் (சிட்ரா) குமாரபாளை யம் கிளை நிர்வாகி ஜி.பன்னீர் செல்வம், கிளை நூலகர் மா.மாரியாயி வாழ்த்திப் பேசினர். நூலாசிரியர் கேசவ மூர்த்தி ராஜகோபாலன் ஏற்புரையாற்றினார். விடியல் பிரகாஷ் நன்றி கூறினார்.
கஞ்சா விற்பனை: 3 பேர் கைது
உதகை, பிப்.25- உதகையில் ஹைட்ரோபோனிக் கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எல்லையில் நீலகிரி மாவட்டம் உள்ளது. இதனால் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் பயன்பாடு நீலகிரியில் அதிக ரித்து வருகிறது. ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநி லத்துக்கு நீலகிரி வழியாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொ ருட்கள் கடத்திச் செல்லப்படுகிறது. இந்நிலையில், உதகை பேருந்து நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறு வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் உதகை மேற்கு காவல் உதவி ஆய்வாளர்கள் ஹரிஹரன், நிஷாந்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகை யில் சுற்றித்திரிந்த மூன்று பேரை பிடித்து அவர்கள் வைத்தி ருந்த பையை சோதனை செய்தபோது 1.100 கிலோகிராம் கஞ்சாவும், 100 கிராம் ஹைட்ரோபோனிக் கஞ்சாவும் இருந் தது. விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் காளம்பூ லாவைச் சேர்ந்த அப்துல் வகாப் (34), காட்டேரி உலிக்கல் பகுதியை சேர்ந்த மெல்சர் பால் (35), உதகை வண்டிச் சோலையை சேர்ந்த சுஜன் (35) என்பதும், தொடர்ச்சியாக கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் பின்னர் அவர்களை நீதி மன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.