districts

img

பணிக்கம்பட்டி சமுதாய நலக்கூடத்திற்கு எம்.பி. நிதி ரூ.9.80 லட்சத்தில் சமையல் கூடம்

திருப்பூர், நவ. 24 – பல்லடம் ஒன்றியம் பணிக்கம்பட்டி ஊராட்சியில் உள்ள  சமுதாய நலக்கூடத்திற்கு ரூ.9.80 லட்சம் செலவில் சமையல்  கூடம் அமைப்பதற்கு வெள்ளியன்று அடிக்கல் நாட்டப்பட் டது. கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜனின் தொகுதி வளர்ச்சி நிதியில் இப்பணி செய்யப்படுகிறது.  பல்லடம் ஒன்றியம் பணிக்கம்பட்டி ஊராட்சியில் உள்ள  சமுதாய நலக்கூடத்தில் ரூ. 9 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில்  சமையல் கூடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா பணிக்கம்பட்டி  ஊராட்சிமன்றத் தலைவர் ரோஜாமணி ஈஸ்வரன் தலைமை யில் நடைபெற்றது. இவ்விழாவில் பணிக்கம்பட்டி முன்னாள்  ஊராட்சிமன்றத் தலைவர் ஈஸ்வரன், பல்லடம் ஊராட்சி ஒன்றி யக்குழு துணைத் தலைவர் ஈ.பாலசுப்பிரமணியம், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர்  செ.முத்துக்கண்ணன், பல்லடம் ஒன்றியச் செயலாளர் ஆர்.பர மசிவம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் முருகசாமி, மயிலாத்தாள் மற்றும் ஜெயபிரகாஷ், நை. பிரகாசம், ஜோதிபாசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.