districts

img

சிபிஎம் தலைமையில் 750 பேர் மனு அளிப்பு

நலிந்தோருக்கு உதவித்தொகை காகிதத்தில் மட்டுமா?

திருப்பூர், ஜன. 29 - திருப்பூரில் முதியோர், வித வைகள், கணவனால் கைவிடப் பட்டோர் என நலிந்தோர் உதவித் தொகை கிடைக்கப் பெறாத 750 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் மனுக் கொடுக்கும் போராட்டத்தில் பங்கேற்று வரு வாய்த் துறையினரிடம் மனு அளித் தனர். திருப்பூர் மாநகரில் நெருப் பெரிச்சல் வட்டாரத்தைச் சேர்ந்த  2, 3, 4 மற்றும் 5 ஆகிய வார்டு களிலும், செட்டிபாளையம் பகுதி யைச் சேர்ந்த 1, 9, 10 மற்றும் 15  ஆகிய வார்டுகளிலும் நலிந்தோர்  உதவித் தொகை பெறுவதற்குத் தகுதி இருந்தும், பல முறை விண் ணப்பித்தும் அரசு நிர்வாகத்தால் இதுவரை உதவித் தொகை தராமல் இழுத்தடிக்கப்பட்ட மக்களுக்கு மனுக் கொடுக்கும் இயக்கத்தை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியது.  திருப்பூர் நெரிப்பெரிச்சல் வட் டாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த ஒருவார கால மாக, ஜனவரி 22 முதல் 27ஆம் தேதி  வரை நெருப்பெரிச்சல், தோட் டத்துப்பாளையம்,வாவி பாளையம், சமத்துவபுரம், குருவா யூரப்பன்நகர், எஸ்.ஆர்.வி.நகர், கூலிபாளையம், ஆகிய எட்டு மையங்களில் மனு எழுதும் முகாம்  நடத்தப்பட்டது. இதில் 600க்கும்  மேற்பட்ட மனுக்கள் எழுதப்பட் டன. இதேபோல் அங்கேரிபாளை யம் பகுதியிலும் பொது மக்களிடம் மனுக்கள் எழுதி வாங்கப்பட்டன. இந்நிலையில், 29ஆம் தேதி புதனன்று திருப்பூர் பிஎன் ரோடு பூலுவபட்டி நால்ரோட்டில் உள்ள  வருவாய் ஆய்வாளர் அலுவல கத்தின் முன்பாக மனுக் கொடுக்கும்  போராட்டம் நடத்தப்பட்டது.சிபி எம் கட்சியின் வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் ஆ.சிகாமணி தலை மையில் நடைபெற்ற இப்போராட் டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், ஒன்றியச் செயலாளர் கே.பழனிச்சாமி ஆகி யோர் கோரிக்கையை வலியு றுத்திப் பேசினர். இதில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மகாலிங்கம், சி.பானுமதி, கிளைச் செயலாளர்கள் அழகு, செல்வராஜ் மற்றும் மாதர் சங்கத்தைச் சேர்ந்த மீனாட்சி, மங்குலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நலிந்தோர் உதவித் தொகைக்கு  மனு எழுதிய சுமார் 500 பேர் திரண்டு வந்திருந்தனர். அனைவரும் தங்கள் கோரிக்கை மனுக்களை வருவாய் ஆய்வாளரிடம் வழங்கினர். மொத்தம் சுமார் 500 மனுக்கள் வழங்கப்பட்டன. அதேபோல், அங்கேரிபாளை யத்தில் உள்ள கிராம நிர்வாக அலு வலர் அலுவலகம் முன்பாக கட்சி யின் வடக்கு ஒன்றியக்குழு உறுப் பினர் ஆர்.காளியப்பன் தலைமை யில் மனுக் கொடுக்கும் போராட்டம்  நடத்தப்பட்டது. இதில் ஒன்றியச்  செயலாளர் கே.பழனிச்சாமி, ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் கே. மாரப்பன், எஸ்.அப்புச்சாமி, கோபால், வசந்தி, கிளைச் செய லாளர்கள் என்.பாலசுப்பிர மணியம், காளீஸ்வரன், ராஜேஷ், இந்திரா நகர் பாண்டுரங்கன், விஜயபுரி கார்டன் பாண்டுரங்கன் ஆகியோர் பங்கேற்றனர். இங்கு 300க்கும் மேற்பட்டோர் கிராம நிர் வாக அலுவலரிடம் மனுக்கள் அளித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் இப்போராட்டத்தில் பங்கேற்றுப் பேசுகையில், இந்த பகுதியில் மட்டு மின்றி மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சி, கிராம ஊராட்சிகள் என  அனைத்துப் பகுதிகளிலும் நலிந் தோர் உதவித் தொகை கிடைக் காமல் தகுதி உடைய ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மனுக் கொடுக்கும் போராட்டம் முதல் கட்ட இயக்கம் மட்டுமே, அதிகாரிகள், அரசு நிர்வாகம் இதை  பரிசீலித்து உடனடியாக நலிந் தோருக்கு உதவித் தொகை வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும், மற்ற அரசியல் கட்சிகளின் திசை திருப்பங்களை ஏற்காமல், மக்கள் இப்பிரச்சனையில் மார்க் சிஸ்ட் கட்சி முன்னெடுக்கும் போராட்டங்களில் தொடர்ந்து பங்கேற்க வேண்டும். இப்பிரச் சனையில் நேரடியாக மாவட்ட ஆட்சியரை சந்தித்துப் பேசி நடவடிக்கை எடுக்க வலியு றுத்துவோம். நடவடிக்கை இல்லா விட்டால் அடுத்த கட்டமாக குடி யேறும் போராட்டம், காத்திருக்கும் போராட்டம் ஆகியவற்றை முன்னெ டுப்போம் என்று கூறினார்.

;