districts

ஓவேலி: யானைகளை கண்டறிய 5 சிறப்பு முகாம்கள்

உதகை, ஜன.30– ஓவேலி பகுதிக்கு யானைகள் வருவதை கண்டறிய ஐந்து சிறப்பு முகாம்கள் அமைக் கப்பட்டு கும்கி யானைகளை கொண்டு, 24 மணி நேரம் கண்காணிப்பு பணியை தீவிரப் படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத் துள்ளதாக நீலகிரி ஆட்சியர் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம், ஓவேலி பகுதியில் கேர ளாவிலிருந்து தமிழகத்துக்கு இடம்பெ யர்ந்து வரும் யானைகளால் சமீப காலமாக யானை - மனித மோதல்கள் அதிகரித்து வரு கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் 20க்கும் மேற் பட்டோர் காட்டு யானை தாக்கி உயிரிழந் துள்ளனர். இனி வரும் காலங்களில் யானை  தாக்கி மனிதன் உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம், வனத்துறை, போலீ சார்  ஒன்றிணைத்து குழு அமைத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  ‘கேரளா விலிருந்து யானைகள் ஓவேலி பகுதிக்கு வரு வதை கண்டறிய பார்வுட், சூண்டி, நாயக்கன் சோலை, வட்டப்பாறை, எல்லமலை பகுதி களில் ஐந்து சிறப்பு முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளது. ஐந்து முகாம்களில் கும்கி யானை களை கொண்டு, 24 மணி நேரமும் கண்கா ணிப்பு பணியை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தனியார் தேயிலை தோட்டங்களில் யானைகள் முகாமிட்டிருக்கும் நேரங்களில் தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பக்கூ டாது என தனியார் தேயிலை தோட்ட உரிமையா ளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற் றறிக்கை அனுப்பப்படும். அதிகாலை,  இரவு நேரங்களில் வேலைக்கு செல்வதை தவிர்த்து  காலை 8:30 மணிக்கு மேல் பிற்பகல் 2:30 மணி வரை தனியார் தேயிலை தோட்டங்களில் தொழிலாளர்களை பணியமர்த்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல், ஓவேலி பகுதியில் வெளி நாட்டு வனவிலங்கு ஆராய்ச்சியாளர்களை கொண்டு கிராமப் பகுதியில் யானைகள் வரு வதை தடுப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு  வருகிறது. பொதுமக்கள் தேவையின்றி இரவு நேரங்களில் வெளியே வரக்கூடாது, என் றார்.  முதுமலை புலிகள் காப்பக கள இயக்கு நர் வெங்கடேஷ் கூறுகையில், கன்னியா குமரி முதல் நீலகிரி வரை தமிழக அரசின் முதன்மை வன பாதுகாவலர் தலைமையில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு தமிழக முழுவதும் யானை வழித்தடங்களில் ஆய்வு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இப்பணி நிறைவடையும் பட்சத்தில்  யானை வழித்தடங்களில் உள்ள பிரச்சனை களுக்கு தீர்வு காணப்படும். ஓவேலி மற்றும்  அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில்  காட்டு யானைகள் நுழைவதை கண்டறிய அதிநவீன ‘ட்ரோன்’ கேமராக்களை கொண்டு தொடர் கண்காணிப்பு பணிகள் நடை பெறும், என்றார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலு வலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட வன அலு வலர் கவுதம், கோட்டாட்சியர் துரைசாமி உட் பட பலர் பங்கேற்றனர்.

;