districts

img

வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு 8 சட்டமன்ற தொகுதிகளில் 2520 வாக்குச்சாவடிகள்

திருப்பூர், ஆக. 22 – திருப்பூர் மாவட்டத்தில் எட்டு சட்டமன்றத்  தொகுதிகளில் மொத்தம் 2ஆயிரத்து ஐநூற்று இருபது வாக்குச்சாவடிகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டு வரைவு  வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டுள் ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்க ளன்று மாவட்ட ஆட்சியர், மாவட்ட தேர்தல் அலுவலர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன் னிலையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல்  வெளியிடப்பட்டது. இதில் 1500 வாக்கா ளர்கள் என்ற அளவில் ஒரு வாக்குச்சாவடி  அமைக்கப்படுகிறது. 1500க்கும் மேல் வாக்கா ளர்கள் கொண்ட வாக்குச்சாவடிகளை தனி யாகப் பிரிக்கவும் உத்தேசிக்கப்பட்டு உள் ளது. இதன்படி தாராபுரம் தொகுதியில் 298  வாக்குச்சாவடிகள் உள்ளன, காங்கேயத்தில் 295 வாக்குச்சாவடிகள் உள்ளன, அவிநாசி யில் 313 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதேச மயம் திருப்பூர் வடக்கு தொகுதியில் ஏற் கெனவே இருக்கும் 374 வாக்குச்சாவடிகளு டன் கூடுதலாக 5 வாக்குச் சாவடிகள் சேர்த்து  379 வாக்குச்சாவடிகள் அமைகின்றன. இதில்  4 வாக்குச்சாவடிகள் வேறு இடத்துக்கு மாற் றப்படுகின்றன. அதேபோல் திருப்பூர் தெற்கு தொகுதி யில் ஏற்கெனவே இருக்கும் 242 வாக்குச்  சாவடிகளில் கட்டிடம் மாற்றம் செய்யப்படு வது 7, வேறு இடத்துக்கு மாற்றப்படுவது 17  என 24 வாக்குச்சாவடிகள் மாற்றி அமைக்கப் படுகின்றன.

பல்லடத்தில் ஏற்கெனவே 410 வாக்குச் சாவடிகள் உள்ளன. அத்துடன் கூடுதலாக 2 வாக்குச்சாவடிகள் புதிதாக அமைகின்றன. மொத்தம் 412 வாக்குச்சாவடிகள் அமைக்க  உத்தேசிக்கப்பட்டுள்ளன. இதில் 2 கட்டிட  மாற்றம் செய்யப்படுகிறது. 4 வாக்குச்சாவ டிகள் வேறு இடத்துக்கும், 5 வாக்குச்சாவ டிகள் பெயர் மாற்றம் செய்யப்படவும் உள் ளன. உடுமலைப்பேட்டையில் ஏற்கெனவே இருக்கும் 294 வாக்குச்சாவடிகளில் 12 வாக் குச்சாவடிகள் கட்டிடம் மாற்றப்படுகின்றன. 2  வாக்குச்சாவடிகள் வேறு இடத்திற்கு மாற்றப் படுகின்றன. மடத்துக்குளம் தொகுதியில்  287 வாக்குச்சாவடிகளில் 1 வாக்குச்சாவடி கட் டிடம் மாற்றப்படுகிறது. 3 வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றம் செய்யப்படுகின்றன. எனினும்  மொத்த வாக்குச்சாவடிகள் 287 ஆகவே இருக்கும்.  மொத்தத்தில் ஏற்கெனவே இருந்த 2513  வாக்குச்சாவடிகளுடன்,

1500க்கும் மேற்பட்ட  வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடிகள் பிரித்து தனியாக அமைக்கப்படுவது என்ற  அடிப்படையில் கூடுதலாக 7 வாக்குச்சாவடி கள் அமைகின்றன. அவற்றையும் சேர்த்து மொத்தம் 2520 வாக்குச்சாவடிகள் வருகின் றன. இந்த வாக்குச்சாவடிகளில் 22 வாக்குச்சா வடிகள் ஒரே இடத்தில் வேறு கட்டிடத்திற்கு மாற்றப்படுகின்றன. 27 வாக்குச்சாவடிகள் ஏற் கெனவே இருந்த இடத்தில் இருந்து, வேறு  இடத்துக்கு மாற்றப்படுகின்றன. 8 வாக்குச் சாவடிகளின் பெயர் மாற்றப்படுகின்றன. இந்த மாறுதலுக்கு உள்ளாகும் வாக்குச் சாவ டிகளின் மொத்த எண்ணிக்கை 57 ஆகும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த உத் தேச வாக்குச்சாவடிகள் குறித்து கோரிக்கை கள், ஆட்சேபனைகள் இருந்தால் ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்குள் வாக்காளர் பதிவு அலுவலர்  மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்  அலுவலகங்களில் தெரிவிக்கலாம். இவை  சட்டமன்றத் தொகுதிகளில் அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சியினருடன் நடத்தப்படும் கூட்டங்களில் பரிசீலிக்கப்பட்டு மாவட்ட அள வில் இறுதி செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று ஆட்சியர், மாவட்ட தேர்தல் அலுவலர்  தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.