districts

img

திறக்கப்படாத அமராவதி அணையின் 2 ஷட்டர்கள்

உடுமலை, டிச.15- அமராவதி அணையின் இரண்டு  ஷட்டர்களை திறக்காமல் இருப்பது பல் வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ள தாக, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின்  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில  நாட்களாக பெய்துவரும் கனமழை யால் அணையின் நீர் மட்டம் முழு கொள்ளவை எட்டியது. இந்நிலையில் வெள்ளியன்று அணைக்கு நீர்வரத்து பலமடங்கு அதிகமானதால், உபரிநீர் ஆற்றில் திறக்கபட்டது. அமராவதி அணையில் தண்ணீர் குறைவாக இருக் கும் போது, பழைய ஆயக்கட்டு விவ சாயிகள் பயன்பெறும் வகையில் ஸ்பெல்வே (SPILWAY) மூலம் ஆற்றில்  தண்ணீர் திறக்கப்படும். மேலும், புதிய  ஆயக்கட்டு விவசாயிகளுக்கு பிராதான  கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அணைக்கு கூடுதல் தண்ணீர் வரும்போது அணையின் பாதுகாப்பு கருதி ஆற் றில் தண்ணீர் திறக்கும் வகையில் பிர தானமாக இருக்கும் ஒன்பது ஷட்டர் களில் அணைக்கு வரும் நீர்வரத்தை  பொருத்து உபரி தண்ணீர் திறக்கபடு கிறது. இப்படி உபரியாக இருக்கும் தண்ணீர் பிராதன ஷட்டர்களில் திறக் கும் போது ஸ்பெல்வே-யில் தண்ணீர் திறக்கப்படாது. ஆனால், கடந்த சில  நாட்களாக உபரிநீர் திறக்கும் போது மொத்தமாக இருக்கும் ஒன்பது ஷட் டர்களில் எழு ஷட்டர்கள் மற்றும் ஸ்பெல்வே மூலம் உபரிநீர் திறக்கப் பட்டுள்ளது. பிரதான இரண்டு ஷட்டர் கள் திறக்கதது பல்வேறு சந்தேகங் களை எழுப்பியுள்ளது. மூன்று மாவட்ட  விவசாயிகள் மற்றும் ஆயிரக்கண்கான கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும், ஆண்டு முழுவதும் நிரம்பியிருக்கும் முக்கிய அணையை முறையாக பராமரிக்க வேண்டும் என் பதே அனைவரின் கோரிக்கையாக உள் ளது.