districts

img

வாளையார் அணையில் குளிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 2 கல்லூரி மாணவர்கள் மாயம்- தேடும் பணி தீவிரம்

வாளையார் அணையில் குளிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 2 கல்லூரி மாணவர்கள் மாயமனதை தொடர்ந்து கேரள போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம், நவகரை பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்லூரி விடுதியில் வங்கி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் 8 பேர், தமிழக கேரள எல்லையில் உள்ள வாளையார் அணைக்கு சென்றுள்ளனர். இதில் மூவர் மட்டும் குளிப்பதற்காக தண்ணீரில் இறங்கியுள்ளனர். அப்போது அணையின் ஆழமான பகுதிக்கு சென்ற மூவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். மேலும் தங்களைக் காப்பாற்றும்படி குரல் எழுப்பினர். இதனைப் பார்த்த சக மாணவர்கள் உடனடியாக வாளையார் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். உள்ளூர் இளைஞர்கள் உதவியுடன் விஷ்ணுகுமார் (18) என்ற மாணவர் மட்டும் மீட்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த கேரள போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் நீரில் மாயமான பொள்ளாச்சியைச் சேர்ந்த திருப்பதி (18) மற்றும் நாமக்கலை சேர்ந்த சண்முகம் (18) ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.