districts

img

ரயில்வே மேம்பாலத்திற்காக காத்திருக்கும் 100 கிராமங்கள்

சேலம், செப். 14- சேலம் அருகே ரயில்வே மேம் பாலம் அமைப்பதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகியும், தற்போது வரை அதற் கான பணிகள் துவங்கப்படாததால் 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அவதிக்குள் ளாகி வருகின்றனர். சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ் சாலை அருகே உள்ளது மல்லூர் பேரூராட்சி. இப்பகுதியில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள் ளன. இந்த பேரூராட்சிக்குட்பட்ட வேங்காம்பட்டி என்ற இடத்தில் ரயில்வே கேட் உள்ளது. கிராமத்தி லிருந்து நகரத்தை இணைக்கும் ஒரே ஒரு வழித்தடமாக இந்த  சாலை உள்ளது. வேங்காம்பட்டி,  பாலகுட்டபட்டி, பாலம்பட்டி, அண் ணாமலைபட்டி, ஏர்வாடி, ஆலம்பா ளையம், வாணியம்பாடி, வெண் ணந்தூர் உள்ளிட்ட 100க்கும் மேற் பட்ட கிராமங்களுக்கு செல்லும் ஒரே பாதையாக இந்த சாலை உள்ளது.  நாள்தோறும் 10க்கும் மேற்பட்ட ரயில்கள் இவ்வழியாக செல்வதால் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படு கிறது. ஒரு முறை ரயில்வே கேட் மூடி னால் 25 நிமிடங்களுக்கு மேலாக பொதுமக்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் காலை நேரங் களில் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியா மல் மாணவ, மாணவிகள் அவதி  அடைந்து வருகின்றனர். ஆயிரக் கணக்கான இருசக்கர வாகனங் கள், பேருந்துகள், சரக்கு வாகனம் உள்ளிட்டவை பல கிலோ மீட்டர் தொலைவிற்கு அணிவகுத்து காத் திருக்கின்றன. மேலும், அந்தப் பகுதி பெரும்பாலும் விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது. இதனால் விளை பொருட்களை உரிய நேரத் திற்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்ற னர். இதனிடையே ரயில்வே மேம் பாலம் அமைக்க வேண்டும் என அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலமுறை அதிகாரிகள் வலியுறுத்தி வந்தனர். மேலும், பல்வேறு கட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்த னர். இதையடுத்து ரயில்வே மேம் பாலம் அமைக்கப்படும் என அதிகா ரிகள் உறுதியளித்தனர். மேலும், இதற்கான திட்டமும் அறிவிக்கப் பட்டது. ஆனால், திட்டம் அறிவித்து ஓராண்டுக்கும் மேலாகியும் அதற் கான பணிகள் தற்போது வரை  துவங்கப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்பவர் கூறு கையில், இந்த ரயில்வே கேட்டை கடந்து தான், விவசாயிகள் தாங் கள் விளைவிக்கும் பொருளை கிரா மத்திலிருந்து நகரத்திற்கு எடுத்துச் செல்கின்றனர். அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால் ஒவ்வொரு நாளும் சொல்லில் அடங்காத வேத னையை சந்தித்து வருகின்றனர். அத்தியாவசியமாக மருத்துவ சேவைக்கு கூட செல்ல முடியாமல்,  உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வரு கிறது. எனவே, அங்கு ரயில்வே மேம்பாலம் அமைத்து தர வேண் டும் என பலமுறை கிராம சபை  கூட்டத்தில் தீர்மானம் வைத்துள்ள னர்.

இதையடுத்து ரயில்வே நிர் வாகம் மேம்பாலம் அமைக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என அறி விப்பை வெளியிட்டது. ஆனால், தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டு ஒரு வருடங்களாகியும் இதுவரை எந்தவொரு பணிகளும் தொடங்க வில்லை. எனவே, உடனடியாக பணிகளை தொடங்கி 100 கிராம மக்களின் வேதனைகளை போக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும், என் றார். இதேபோல் அப்பகுதியில் வசிக் கும் மேகலா என்பவர் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் மேற்கண்ட பிரச்சனையை சந்தித்து வருகிறோம். காலையில் உரிய நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாமல் குழந்தைகள் சிரமப் பட்டு வருகின்றனர். ஒரு அவசர தேவைக்கு மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இரண்டு தினங்களுக்கு முன்பு கூட ஒருவர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவ மனைக்கு அழைத்து செல்ல முயன்ற  பொழுது ரயில்வே கேட் மூடப்பட் டது. இதனால் அவர் இங்கேயே பரி தாபமாக உயிரிழந்த அவலம் ஏற்பட் டது. எனவே, உடனடியாக ரயில்வே நிர்வாகம் இப்பகுதியில் பணிகளை தொடங்கி விரைந்து முடித்து பொது மக்களின் மீளா துன்பத்தை துடைக்க வேண்டும், என்றார்.