districts

img

நூறுநாள் வேலைத்திட்டத்தில் முறைகேடு

தருமபுரி, நவ.2- பெரும்பாலை ஊராட்சியில் 100 நாள் வேலையில் நடை பெற்று வரும் ஊழலை தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்ட குற்ற வாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விதொச  மாநாட்டில் தீர்மானம் இயற்றப்பட்டது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க பென்னா கரம் கிழக்கு ஒன்றிய 3 ஆவது மாநாடு சின்னகடமடை கிராமத் தில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் வி.தேவராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வி.ரவி மாநாட்டை துவக்கி வைத் தார். ஒன்றிய செயலாளர் ரஜினி (எ) முருகன் வேலை அறிக்கையை முன்வைத்தார். பெரும்பாலை ஊராட்சியில் 100 நாள் வேலையில் நடை பெற்று வரும் ஊழலை தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்ட குற்ற வாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தளி, அள்ளி, 7ஆவது மைல், தோளூர் காலனி, பெரும்பாலை, கோவள்ளி கோம்பை ஆகிய கிராமங்களில் பழுதடைந்துள்ள அரசு வீடு களை புதுபிக்க நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், பகுதிக்குழு தலைவராக கே.சின்னதுரை, செயலாளராக எம்.செல்வம் உள்ளிட்ட 17 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. மாவட்ட செயலாளர் எம்.முத்து நிறைவுறையாற்றினார். முடிவில், எம்.செல்வம் நன்றி  கூறினார்.