புதுச்சேரி பிரதேசத்தில் 100 நாள் வேலை திட்டத்தை கிராமப்புறப் பகுதிகளில் உடனடியாக துவக்க வேண்டும். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்களுக்கு 7ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் புதுச்சேரி ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது. பிரதேச தலைவர் உலகநாதன், செயலாளர் மணிபாலன், நிர்வாகிகள் கலிவரதன், தட்சிணா மூர்த்தி ஆகியோர் மனுவை அளித்தனர்.