districts

img

ஓசூரில் நாளை ஆர்ப்பாட்டம் வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டில் முடிவு

கிருஷ்ணகிரி, மார்ச் 20 - பொதுத்துறை பாது காப்பு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி மார்ச்  28-29 தேதிகளில் அகில  இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இந்த வேலைநிறுத்த ஆயத்த மாநாடு ஓசூரில்  ஞாயிறன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு தொமுச மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஏஐடியுசி மாநில தலைவர் ஆறுமுகம், தொமுச மாநில செயலாளர் சண்முக ராஜன், சிஐடியு மாவட்டச் செயலாளார் ஸ்ரீதர், பொருளாளர் பீட்டர், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்டச் செயலாளர் கருணாநிதி, பெஃபி செய லாளர் சிவபிரகாஷ், தொமுச  மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, டாஸ்மாக் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், அங்கன்வாடி சங்க தலைவர் பத்மா, ஏஐடி யுசி மாவட்ட செயலாளர் மாதையன், உழைக்கும் மக்கள் மாமன்ற செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பேசினர். வேலைநிறுத்தத்தின் முதல்நாளான 28ஆம் தேதி  மறியல் போராட்டம் நடத்துவது, இரண்டாம் நாளான 29 ஆம் தேதி ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்து வது என்று முடிவெடுக்கப் பட்டது.

;