districts

கோவில் நிலங்களில் குடியிருப்போரை வெளியேற்ற எதிர்ப்பு

கிருஷ்ணகிரி, மே 28- கோவில் நிலங்களில் இருந்து குத்தகைதாரர்கள், குடியிருப்போரை வெளியேற்றதே என தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் முதல் மாவட்ட மாநாடு எம்.பழனி தலைமையில் சிங்காரப்பேட்டையில் சனிக்கிழமை (மே 28) நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ் மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்ட அமைப்பாளர் சபாபதி வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாநில அமைப்புக் குழு உறுப்பினர் செல்வம் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முருகன் நன்றி கூறினார். கோவில் மற்றும் அனைத்து சமய நிலங்களில் குடியிருப்போருக்கும், பழைய வாடகைதாரர்களுக்கும் நியாயமான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும், வாடகை, குத்தகை பாக்கி என்ற பெயரில் பல லட்ச ரூபாயை நிர்ணயம் செய்து அந்த இடத்திலிருந்து அவர்களை வெளியேற்ற முயற்சிப்பதை கைவிட வேண்டும். குத்தகை பாக்கிகளை தானியமாக வசூல் செய்ய வேண்டும், கோவில் நிலங்களில் நீண்டகலமாக குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும். அரசாணை 318ஐ அமல்படுத்த சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் தலைவராக ஆர்.சபாபதி, செயலாளராக அனுமப்பா, பொருளாளராக கே.சி.ராமசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;