districts

அக். 30 வரை ஓசூர் அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கை

கிருஷ்ணகிரி, அக். 8- ஓசூர் அரசு ஐடிஐயில் அக்டோபர் 30 வரை  நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதுகுறித்து ஐ.டி.ஐ.நிர்வாகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: ஓசூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில்  (ஐ.டி.ஐ.) 2022-23ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை வரும் 30ஆம்  தேதி வரை நடைபெறுகிறது. இதில் சேர 14 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 14. அதிகபட்ச வயது வரம்பு இல்லை.  பெண்களுக்கான சிறப்பு தொழிற்பிரிவு களாக, கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடு தல் உதவியாளர், கம்மியர் இயந்திரம்  மற்றும் மின்னணுவியல் தொழில்நுட்ப வியலாளர் ஆகியவை உள்ளது. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஒயர்மேன் (2 வருடம்), வெல்டர் (1 வருடம்) ஆகிய பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், கணினி வன்பொருள் மற்றும் வலைதள பராமரிப்பு, மின் பணியாளர், கம்மி யர் மின்னணுவியல், பொருத்துனர், அச்சு வார்ப்பவர் தொழில்நுட்பவியலாளர், கம்மி யர் கருவிகள், கம்மியர் எந்திரம், மின்னணு வியல் தொழில்நுட்பவியலாளர், இயந்திர வேலையாள் கம்மியர் மோட்டார் வண்டி, கருவி மற்றும் அச்சு செய்பவர் மற்றும் கடைசலர் ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு ஆண், பெண் இருவரும் விண்ணப்பிக்க லாம். நேரடி மாணவர் சேர்க்கைக்கு மாண வர்களுக்கு உதவிடும் வகையில், ஓசூர்  அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை உதவி மையம் அமைக்கப் பட்டுள்ளது. பயிற்சி காலத்தின் போது பயிற்சியாளர்களுக்கு மாதம்தோறும் 750 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இதை தவிர விலையில்லா பாடபுத்தகம், வரைபட கருவிகள், லேப்டாப் கம்ப்யூட்டர், சீருடை, மிதிவண்டி, பேருந்து பயண அட்டை, மூடு காலணி ஆகியவை வழங்கப் படும். ஆண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி உண்டு. எனவே, தகுதியுள்ள அனைத்து மாணவ,  மாணவிகளும் ஓசூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு துணை இயக்குநர்,  முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஓசூர் என்ற முகவரியில் தொடர்பு  கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;